சூடு பிடிக்கிறது உள்ளாட்சி தேர்தல்
சென்னை:
அடுத்த மாதம் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருப்பதையடுத்து அனைத்து கட்சி வேட்பாளர்களும் சீட்கேட்டு விண்ணப்பிக்கும் பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளனர்.
அடுத்த மாதம் 16 மற்றும் 18ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ளது. இதையடுத்துஅனைத்து கட்சியினரும் கட்சியால் அமைக்கப்பட்ட தேர்தல் பணிக் குழுவினரிடம் சீட் கேட்டு விண்ணப்பங்களைகொடுத்து வருகிறார்கள்.
சென்னை மேயர் பதவிக்கும், கோயம்புத்தூர் மேயர் பதவிக்குமான அ.தி.மு.க. வேட்பாளர் பெயர்களைஜெயலலிதா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்தார்.
நாகப்பட்டினம்,புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை. பல்லாவரம், விழுப்புரம், ஈரோடு, திருமங்கலம், திருவாரூர்நகராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர்களையும் ஜெயலலிதாஅறிவித்துவிட்டார்.
இந்நிலையில் தென் சென்னை காங்கிரஸ் தலைவர் இல. பாஸ்கரன் சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட சீட்கேட்டு இன்று (திங்கள்கிழமை) மனு தாக்கல் செய்தார்.
தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்ந்து சூடுபிடித்து வருகிறது.


Click it and Unblock the Notifications
