அமைச்சர்களும் ராஜினாமா செய்யவேண்டும்- உச்ச நீதிமன்றம்
சென்னை
ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றது செல்லாது என்று இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம், அவரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் பதவியும் செல்லாது என்று கூறியுள்ளது.
இருப்பினும ஜெயலலிதா அரசால் எடுக்கப்பட்ட முடிவுகளும், அமல்படுத்தப்பட்ட திட்டங்களும் இந்தத்தீர்ப்பினால் பாதிக்கப்படாது என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
3 ஆண்டுகளுக்கு மேல் சிறைதண்டனை பெற்றவர்கள் முதல்வராக பதவியேற்றது செல்லாது என்ற கூறி, கடந்த மே14ம் தேதி ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டது செல்லாது என்று சுப்ரீம் கொர்ட் தீர்ப்பளித்துள்ளது.
இந்த் தீர்ப்பின் மூலம் ஜெயலலிதா நியமித்த அமைச்சர்களும் தங்கள் பதவியைத் துறக்க வேண்டிய கட்டாயத்தில்இருக்கிறார்கள். இது தொடர்பாக அமைச்சர்களுடன் இன்றே தனது வீட்டில் ஜெயலலிதா ஆலோசனைநடத்திவிட்டார்.
ஆனால் ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுத்த முடிவுகளும், திட்டங்களும் இந்தத் தீர்ப்பினால் பாதிக்கப்படாதுஎன்றும் தீர்ப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications