பன்னீர்செல்வம் மீது வழக்கு தொடர்வேன்- சு.சுவாமி எச்சரிக்கை
சென்னை:
தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் சட்டத்துக்கு புறம்பாக பேட்டியளித்தால் கோர்ட்டில் வழக்குத் தொடர்வேன்என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முதல்வராகப் பொறுப்பேற்ற பின்பு நிருபர்களுக்குப் பேட்டியளித்த பன்னீர்செல்வம், நடப்பது அம்மா ஆட்சிதான்என்றும் தான் முதல்வரானது தற்காலிக முடிவுதான் என்றும் கூறினார்.
இதற்கு சுவாமி கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்கூறியதாவது,
தமிழகத்தின் புதிய முதல்வர் தனது பேட்டியில் நடப்பது அம்மாவின் (ஜெயலலிதாவின்) ஆட்சிதான் என்றும் தான்தற்காலிக முதல்வர்தான் என்றும் கூறியுள்ளார்.
இது சட்டவிரோதமானதாகும். மேலும் அம்மாவின் வழிகாட்டுதலின் படி திட்டங்களை நிறைவேற்றுவேன் என்றும்கூறியுள்ளார். இது முதல்வராகப் பதவியேற்கும்போது அவர் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு முரணானதாகும்.
பிறகு போயஸ் கார்டனுக்கு, அதாவது ஜெயலலிதாவின் வீட்டுக்கு தனது இருப்பிடத்தை மாற்றிக்கொள்ள அவர்திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
முதல்வரின் இந்த முடிவு அவர் எடுத்துக்கொண்ட ரகசியக் காப்புப் பிரமாணத்திற்கு எதிரான முடிவாகும்.
தொடர்ந்து முதல்வர் இவ்வாறு பேசிவந்தால் அவர் மீது கோர்ட்டில் வழக்குத் தொடர்வேன் என்று எச்சரிக்கிறேன்.இவ்வாறு சுவாமி கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications