உலகம் முழுவதும் அமெரிக்கர்கள்-யூதர்களை தாக்குவோம்- பின்லேடன் மிரட்டல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

உலகெங்கும் உள்ள அமெரிக்கர்களையும் யூதர்களையும் தாக்குவோம் என ஒசாமா பின் லேடன் புதிய மிரட்டல்விடுத்துள்ளார்.

பின்லேடனின் அல்-கீடா அமைப்பின் தலைமை ராணுவ கமாண்டர் நசீர் அகமத் முஜாகித் சார்பில் வெளியிட்டுள்ளபுதிய எச்சரிக்கை அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது எங்களுக்குத் தெரியும். புனிதப் போராளிகளான நாங்கள்எதையும் சந்திக்கத் தயாராக உள்ளோம்.

அமெரிக்கர்களும் யூதர்களும் எங்கிருந்தாலும் அவர்களைத் தாக்குவோம். உலகின் எந்தப் பகுதியில் வசித்தாலும்முஸ்லீம்கள் தங்களை இந்தப் போரில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இறைவனின் கருணையால் நிச்சயம் இந்தப்போரை நாம் வெல்வோம். இஸ்லாம் வெல்லும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந் நிலையில் பாகிஸ்தான் வந்திறங்கியுள்ள மூத்த அமெரிக்க ராணுவ மற்றும் விமானப் படை அதிகாரிகள்அதிபர் பர்வேஸ் முஷாரபுடனும் உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். தொடர்ந்துஇரண்டாவது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) இந்தப் பேச்சுவார்த்தை தொடர்கிறது.

இதற்கிடையே இன்னொரு அமெரிக்க அதிகாரிகள் குழுவும் சில நாட்களில் பாகிஸ்தான் வர உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற