காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் தீக்கிரை

Posted By:
Subscribe to Oneindia Tamil

காபூல்:

ஆப்கானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீவைத்துக் கொளுத்தினார்கள். புஷ் ஒழிக, அமெரிக்கா ஒழிக என்ற கோஷங்களுடன் பல்லாயிரக்கணக்கான ஆப்கானிலும் மக்கள்அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அந்நாட்டு மக்கள் பங்கேற்றனர்.

அமெரிக்கா ஆப்கான் மீது போர்தொடுக்க தயாராக உள்ளதை எதிர்த்து, ஆப்கானில் அமெரிக்காவுக்கு எதிராகஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காபூலில் உள்ள பழைய அமெரிக்கத் தூதரகக் கட்டடம் தீவைத்துக் கொளுத்தப்பட்டது.இதில் அந்தக் கட்டடம் முழுவதும் எரிந்து சாம்பலானது.

காபூல் நகரின் முக்கிய சதுக்கம் ஒன்றில் கூடி "அமெரிக்கா ஒழிக","புஷ் ஒழிக", "இஸ்லாம் வாழ்க" என்றுகோஷமிட்டனர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாணவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் கடைக்காரர்கள், வியாபாரிகள்என அனைத்துத் தரப்பினரும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற