காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்ட வேண்டிய அவசியம் இல்லை: கர்நாடகம்
டெல்லி:
தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருவதால் காவிரி நதி நீர் ஆணையத்தை உடனடியாகக் கூட்ட வேண்டிய அவசியம் இல்லைஎன கர்நாடக அரசு கூறியுள்ளது.
தமிழகத்தில் குறுவை சாகுபடி பயிர்கள் வாடி வருவதால் உடனடியாக காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு தமிழகம் கோரியது.ஆனால், தங்கள் மாநிலத்திலேயே வறட்சி நிலவுவதால் தண்ணீர் தர முடியாது என கர்நாடகம் கூறிவிட்டது.
இதையடுத்து காவிரி நதி நீர் ஆணையத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என தமிழகம் கோரியது. காவிரியில் நீர் விடக் கோரிஉச்ச நீதிமன்றத்திலும் தமிழகம் வழக்குத் தாக்கல் செய்தது.
இதைத் தொடர்ந்து காவிரி ஆணையக் கூட்டம் கடந்த வாரம் கூட்டப்பட்டது. ஆனால், தமிழகத்தில் முதல்வர் மாற்றம்ஏற்பட்டதையடுத்து இக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந் நிலையில் தமிழகத்திலும் கர்நாடகத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் காவிரில் நீரின் அளவுஅதிகரித்துள்ளது. மேட்டூர் அணையிலும் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மழை பெய்து வருவதால் உடனடியாக காவிரி நதி நீர் ஆணையத்தைக் கூட்ட வேண்டியதில்லை என கர்நாடகமுதல்வர் கிருஷ்ணா கூறியுள்ளார்.
கிருஷ்ணா பேட்டி:
வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:
தமிழகத்திலும் கர்நாடகத்திலும் நல்ல மழை பெய்து வருவதால் காவிரிப் பிரச்சனையில் இப்போது ஏற்பட்டுள்ள சிக்கலை தீர்க்கமுடியும் என நம்புகிறோம்.
மழை பெய்து வருவதால் இப்போது காவிரி நதி நீர் ஆணையத்தின் கூட்ட வேண்டியது அவசியம் தானா என்பது குறித்து பிரதமர்யோசிக்க வேண்டும் என்றார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications