அமெரிக்க தலைவரை பேச அழைக்கவில்லை: தாலிபான்
வாஷிங்டன்:
அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தாலிபான் தனக்கு அழைப்பு விடுத்திருப்பதாக அமெரிக்க மனித உரிமைப்பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஜெஸ்ஸி ஜாக்சன் கூறியிருந்த போதிலும், தாங்கள் தாங்கள் அவரைஅழைக்கவில்லை என்று தலிபான் அரசு மறுத்துள்ளது.
"என்னுடைய பேச்சுவார்த்தையால், அப்பாவி ஆப்கன் மக்கள் கொல்லப்படுவது தடுக்கப்படும் என்றால், அதற்குநான் தயார்" என்று ஜாக்சன் கூறியுள்ளார்.
ஆனாலும், தலிபான்களின் அழைப்பை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பதைப் பற்றி அவர் இன்னும் முடிவுசெய்யவில்லை.
அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, ஆப்கனுக்கு ஜாக்சன் செல்வதற்கு அமெரிக்காவும் தடை ஒன்றம்விதிக்கவில்லை. இனி பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது.
ஜாக்சன் செல்வதற்கு மறுப்பு ஒன்றும் தெரிவிக்கவில்லை என்றாலும், அமெரிக்கா இதை விரும்பவில்லை என்றேதெரிகிறது.
இந்நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஜாக்சனை தாங்கள் அழைக்கவே இல்லை என்று தலிபான் அரசுஅடித்துக் கூறியுள்ளது.
ஆனாலும், "தற்போதுள்ள பிரச்சனை குறித்துப் பேசுவதற்காக ஜாக்சன் வருகிறார் என்றால், நாங்கள் நிச்சயம்அவரை வரவேற்போம்" என்று தலிபான்கள் கூறியுள்ளனர்.
ஆனால், ஜாக்சன் இப்போதைக்குள் ஆப்கன் செல்லும் நிலையில் இல்லை. "ஆப்கன் செல்வதை நான்விரும்பவில்லை. இப்போதைக்கு ஆப்கன் செல்லும் திட்டமே இல்லை" என்று கூறியுள்ளார் ஜாக்சன்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications