திருச்சி மேயர் பதவிக்கு த.மா.கா. சார்பில் சாருபாலா போட்டி
சென்னை:
த.மா.கா. சார்பில் திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்கு சாருபாலா தொண்டமான் போட்டியிடுவார் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும், தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின்இரண்டாவது பட்டியலை, அக்கட்சியின் தலைவர் வாசன் வெளியிட்டார்.
இதில் திருச்சி மேயர் பதவிக்கு த.மா.கா. சார்பில் சாருபாலா தொண்டமான் போட்டியிடுவார் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 நகராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கான வேட்பாளர்களும்அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், சத்தியமங்கலம்-எஸ்.ஏ.சலீம், கிருஷ்ணகிரி-சத்தியமூர்த்தி, திருவள்ளூர்-ஜனார்த்தனம்,விழுப்புரம்-தயானந்தன், உடுமலைப் பேட்டை-சாஸ்திரி சீனிவாசன், சிவகாசி-ஞானசேகரன் மற்றும்போடி-அருணகிரி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் சிவகாசிக்கு தற்போதைய நகர் மன்றத் தலைவரான ஞானசேகரன் மீண்டும் அறவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பழனி, ஊட்டி மற்றும் மயிலாடுதுறை ஆகிய 3 நகர்மன்றத் தலைவர் பதவிகளுக்கு வேட்பாளர்கள் இன்றுஅறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications