5 காவல்துறை அதிகாரிகளுக்கு மகாத்மா விருது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கள்ளச் சாராய ஒழிப்பில் சிறந்து விளங்கிய 5 காவல்துறை அதிகாரிகளுக்கு மகாத்மா காந்தி பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் சார்பில் கள்ளச் சாராய ஒழிப்பிற்காக பாடுபடும் காவல்துறையினருக்கு மகாத்மா காந்தி பதக்கம் வழங்கப்பட்டுவருகிறது.
இந்த ஆண்டுக்கான விருதுக்கு காவல்துறை அதிகாரிகளான ராஜேந்திரன், சாமுவேல் தர்மராஜ், கணேசன், சீனிவாசன்,தமிழ்ச் செல்வன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
வரும் குடியரசு தின விழாவின்போது இவர்கள் அனைவருக்கும் முதல்வர் விருதினை வழங்குவார் என்று அரசு வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications