வேட்பாளர் தேர்வில் அதிருப்தி - 2 தமாகா நிர்வாகிகள் ராஜினாமா
சென்னை:
உள்ளாட்சி தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வு செய்ததில் அதிருப்திடைந்த மத்திய சென்னை,வட சென்னை மாவட்ட தமாகா தலைவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இந்த மாதம் 16 மற்றும் 18ம் தேதிகளில் தமிழகத்தில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல்கள்நடைபெறவுள்ளன.
கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமாகா இணைந்து போட்டியிட்டது. இந்ததேர்தலிலும் அந்த கூட்டணி தொடர்கிறது.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட முறையை கண்டித்து, மத்திய சென்னைதமாகா தலைவர் எம்.ஜோதி, வட சென்னை மாவட்ட தமாகா தலைவர் கே.விஜயன் மற்றும் தமாகாவின் மண்டலபிரச்சார செயலாளர் முனாவர் பாட்சா ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இது குறித்து சென்னையில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த சட்டசபை தேர்தலின் போது மூப்பனார் உடல் நலம் சரியில்லாமல் மருத்துமனையில்அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மூப்பனாரை வற்புறுத்திதங்களுக்கும், தங்கள் ஆதரவாளர்களுக்கும் தேர்தலில் போட்டியிட சீட் வாங்கி விட்டார்கள்.
தற்போது கட்சியின் தலைமை பொறுப்பேற்றிருக்கும் ஜி.கே. வாசன் கட்சியின் முன்னேற்றத்திற்காகஉழைத்தவர்களுக்கு அங்கீகாரம் வழங்குவார் என்று நம்பினோம். ஆனால் எங்கள் நம்பிக்கை பொய்த்து விட்டது,
வாசனை நியாயமாக செயல்பட விடாமல் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் மாவட்டம் விட்டு மாவட்டம், வட்டம்விட்டு வட்டம் சேர்ந்த வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளனர்.
கட்சிப் போராட்டத்தில் சிறை சென்ற தொண்டர்களுக்கு சீட் கொடுக்கப்படவில்லை. சென்னையில் தமாகாபோட்டியிடும் 39 தொகுதிகளில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கூட போட்டியிடவாய்ப்பளிக்கவில்லை.
வேட்பாளர் தேர்வு வியாபாரமாக்கப் பட்டுவிட்டதாக தமாகா தொண்டர்கள் வருத்தம் கொண்டுள்ளனர். எனவேதமாகாவில் தொடர்ந்து பதவி வகிப்பது கட்சி தொண்டர்களுக்கு இழைக்கும் நம்பிக்கை துரோகம் என்று உணர்ந்துஎங்கள் பதவிகளை ராஜினாமா செய்கிறோம் என்று அவர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications