உள்ளாட்சி தேர்தல் அதிமுக ஆட்சி மீதான கருத்துக் கணிப்பு இல்லை- சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் 4 மாத அதிமுக ஆட்சி குறித்த மக்கள்கணிப்பாக அமையாது என்று காங்கிரஸ் ஜனநாயக பேரவையின் பொதுச் செயலாளர்ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

இந்த மாதம் 16 மற்றும் 18ம் தேதிகளில் தமிழகத்தில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல்நடைபெறவுள்ளது.

இதில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறதுகாங்கிரஸ் ஜனநாயக பேரவை.

சென்னையில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிதம்பரம்கூறியதாவது:

வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அதிமுக ஆட்சியின் 4 கால ஆட்சிக்குகுறித்த மக்களின் கணிப்பாக இருக்கும் என்று கூற முடியாது.

மக்கள் திராவிட கட்சிகளான திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வேறு ஒரு கட்சிக்குவாக்களித்து வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கு ஏற்ற கட்சியாகஅவர்கள் காங்கிரஸ் கூட்டணியை தேர்ந்தெடுத்து வாக்களிப்பார்கள் என்றுநம்புகிறேன்.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைவதைநான் வரவேற்கிறேன்.

எங்கள் கட்சி இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கும். மதவாதத்ததை களைவது,ஜாதியைக் கலைவது எங்கள் கட்சியின் முக்கிய நோக்கம். மூட நம்பிக்கை,பத்தாம்பசலித்தனத்தை எதிர்க்கும் கட்சி காங்கிரஸ் ஜனநாயக பேரவை.

அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றை ஆதரிக்கும் கட்சி. நாட்டை முன்னேற்றபாதையில் என்ற எண்ணத்தில் செயல்படுபவர்கள் நாங்கள். எங்கள் கட்சியின்கொள்கைகளோடு ஒத்து செல்பவர்களை எங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்வோம்.எங்கள் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன்கூட்டணியும் வைத்துக் கொள்வோம் என்று கூறினார்.

ப.சிதம்பரம் இணைந்துள்ள கூட்டணியில் பெரும் ஊழல் குற்றம் சாட்டப்பட்டகண்ணப்பனும், ஜாதிக் கட்சிகளும் உள்ளன என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+