கோவையில் சிக்கன் விலை கிடுகிடு உயர்வு.. கறிக்கடையில் விலையை கேட்டு ஷாக்!
கோவை: திருப்பூர், நாமக்கல், கோவை மாவட்டங்களில் இறைச்சி கோழி பண்ணைகள் அதிகமாக உள்ளன. குறிப்பாக கோவையை பொறுத்தவரை பொள்ளாச்சி, பல்லடம், சுல்தான்பேட்டை, சூலூர், அன்னூர் ஆகிய பகுதிகளில் தான் கோழிகள் விற்பனைக்கு வருகின்றன. இந்த சூழலில் திடீரென கோவையில் கோழி இறைச்சி விலை 'கிடுகிடு'வென உயர்ந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஒரு கிலோ ரூ.340 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சென்னையை பொறுத்தவரை 280 ரூபாயில் இருந்து 300 ரூபாய் (தோலுடன்) என்கிற அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையை பொறுத்தவரை பல்லடம், நாமக்கல் பகுதிகளை தாண்டி, ஆந்திராவின் சித்தூர், திருப்பதி,நெல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இருந்து கறிக்கோழிகள் வருகின்றன. இதனால் சென்னைப்பகுதிகளில் விலை ஒன்றாகவும், கோவை பகுதிகளில் விலை ஒன்றாகவும் இருக்கின்றன. தமிழ்நாட்டில் முட்டை விலை பெருமளவு உயர்ந்து வரும் நிலையில், கோழிக்கறியின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவது அசைப்பிரியர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, சூலூர், அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் அதிக அளவு இயங்கி வருகிறன. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளம், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் கறிக்கோழிகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தற்போது காலநிலை மாற்றம், நோய் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கறிக்கோழி உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆடி மாதம் தொடங்க உள்ளதால், கறிக்கோழி நுகர்வு அதிகமாகி வருகிறது. ஆனால் அந்த அளவிற்கு கோவை மாவட்டம் திருப்பூர் மாவட்டங்களில் போதிய உற்பத்தி இல்லை. இதனால் தேவை அதிகரித்துள்ளது .
பொதுவாக தேவையைவிட விலை அதிகரித்தால், கோழி இறைச்சி விலை கிடுகிடுவென உயருவது வழக்கம். அந்த வகையில் நேற்று விலை கடுமையாக உயர்ந்தது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஏராளமானவர்கள் கோழி இறைச்சி கடைகளில் குவிந்தனர். ஆனால் ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.340 வரை விற்பனையானது. உயிருடன் கோழி கிலோ ரூ.180 முதல் ரூ.220 வரை விற்கப்பட்டது.
இதேபோன்று பண்ணைக்கோழிகள் கிலோ ரூ.400 முதல் ரூ.600 வரையும், நாட்டுக்கோழிகள் கிலோ ரூ.500 முதல் ரூ.800 வரையும் விற்பனையாகியது. இதனால் ஆட்டிறைச்சி விலை கிலோ ரூ.800 முதல் ரூ.1,000 வரை விற்பனையானது. நேற்று மார்க்கெட்டில் மீன்களுக்கும் கிராக்கி அதிகமாகவே இருந்தது. வஞ்சிரம் கிலோ ரூ.1,400-க்கும், வாவல் ரூ.1,000-க்கும் விற்பனையானது.


Click it and Unblock the Notifications
