விஷச்சாராயம் அருந்திய 22 பேர் துடிதுடித்து சாவு
சென்னை:
சென்னை அருகே உள்ள புழல் பகுதியில் விஷச் சாராயம் அருந்தி இறந்தவர்களின்எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
புழல் அருகே உள்ள கோட்டூர் என்ற இடத்தில் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை இரவு)இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது.
மிகவும் உடல் மோசமான நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 30 பேர்சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 18 பேரின் நிலைமை கவலைக்கிடமாகஉள்ளது.
மிதைல் ஆல்கஹாலுடன் வேறு ஏதோ ஒரு மருந்தைக் கலந்து அவர்கள் அருந்தியதால்,இவர்கள் அனைவருமே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்குக் கண் பார்வை நன்றாகத் தெரிந்த போதிலும், தற்போது அவர்களுக்குமூச்சுத் திணறல் பெரிதும் ஏற்பட்டுள்ளது. நரம்புகளும் வெகுவாகத்தளர்ச்சியடைந்துள்ளன என்று சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சம்பவத்தையடுத்து இந்த விஷ சாராய விற்பனையில் தொடர்புடைய கஸ்தூரி மற்றும்அவரது மகன் பார்த்திபன் ஆகியோரை பொதுமக்கள் கூடி நின்று தர்ம அடிகொடுத்தனர். அடி தாங்க முடியாத அவர்கள் 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
முதலில் 12 பேர் இறந்தனர். தொடர்ந்து 10 பேர் இறந்தனர். மேலும் பலரின் நிலைமைமோசமாகவே உள்ளது.
நிச்சயதார்தத்துக்கு வந்தவர்கள் பலி:
புழல் பகுதியில் உள்ள கோட்டூர் காலனியில் வெள்ளிக்கிழமை இரவு ஒரு வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது. அந்த நிகழ்ச்சி வந்த பலரும் இரவில் சாராயம்குடித்துள்ளனர். இறந்தவர்களில் பவரும் இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை அம்பத்தூரில் கடந்த மாதம்தான் விஷச் சாராயம் அருந்தி 10 பேர்உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications