அமெரிக்காவை தூண்டுகிறார் டோனி பிளேர்: தலிபான்
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானின் ஆளும் தலிபானை அழிக்க வேண்டும் என்று அமெரிக்காவைஇங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் தூண்டி விடுகிறார் என தலிபான் அரசு குற்றம்சாட்டியுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் டோனி பிளையர் நேற்று (வெள்ளிக்கிழமை) பாகிஸ்தான்சென்றிருந்தார். அவர் பாகிஸ்தான் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
போரினால் ஏற்படும் விளைவுகள் குறித்து டோனி பிளேர் சிந்தித்து பார்க்க வேண்டும்.ஆனால் பிளேர் போருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். இவர் ஏன் தவறானவிஷயங்களுக்கு துணை போகிறார் என்று தெரியவில்லை. அவர் சமாதானம் ஏற்படமுயற்சி மேற்கொள்ள வேண்டும்.
பிளேர் சமாதானம் ஏற்படுத்துவதற்கோ அல்லது பேச்சுவார்த்தை நடத்துவதற்கோபாகிஸ்தானுக்கு வரவில்லை. அவ்வாறிருக்கும்போது அவரை நாங்கள் சந்திக்கவேண்டிய அவசியமில்லை. அவருடன் பேசுவதற்கும் ஒன்றும் இல்லை.
அமெரிக்கா மீதான தாக்குதலுக்கு ஒசாமா பின் லேடன்தான் காரணம் என்பதற்கானஆதாரத்தை பாகிஸல்தானிடம் கொடுத்துள்ளது அமெரிக்கா. அமெரிக்காவிரும்பினால் அதை அவர்கள் எங்களிடம் கொடுக்கட்டும். ஆனால், அவர்கள்பாகிஸ்தானிடம் கொடுத்துள்ள ஆதாரத்தை நாங்கள் எங்களிடம் கொடுக்குமாறுகேட்க மாட்டோம்.
மேலும் அமெரிக்கா கொடுத்துள்ள ஆதாரங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்வதுகுறித்து பாகிஸ்தானும் எங்களை தொடர்பு கொள்ளவில்லை என்று கூறினார்.
இந்நிலையில் தலிபானின் கல்வித்துறை அமைச்சர் முல்லா அமிர் கான் பாகிஸ்தான்பத்திரிக்கையான தி நியூஸ் பத்திரிக்கைக்கு காபூலிலிருந்து தொலைபேசி மூலம்அளித்த பேட்டியில் கூறியதாவது:
தலிபான் அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன என்று பாகில்ஸ்தான் அதிபர்பர்வேஸ் முஷரஃப் கூறியுள்ளார். அவர் தலிபானுடான கொண்டுள்ள உறவில் மாற்றம்ஏற்பட்டுள்ளது. அவரது அணுகுமுறையும் மாறியுள்ளது.
எங்களுடன் இதுநாள் வரை நட்புறவு கொண்டிருந்துவிட்டு தற்போது எங்களுக்குஎதிராக அவர் பேசுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications