அரசு அலுவலகங்களில் பன்னீர் படங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு அலுலவகங்களிலும் தமிழக முதல்வர்பன்னீர்செல்வத்தின் படம் மாட்டப்படுகிறது.

முதல்வரின் படம் அரசு அலுவலகங்களில் மாட்டப்படுவது வழக்கம். தமிழகமுதல்வராக ஜெயலலிதா இருந்த வரை அவரது படம் தமிழக அரசு அலுவலகங்களில்மாட்டப்பட்டிருந்தது.

ஜெயலலிதா முதல்வராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம்தீர்ப்பளித்ததையடுத்து அவரது பதவி ரத்தானது. இதையடுத்து தமிழகத்தின் புதியமுதல்வராக பெரியகுளம் எம்.எல்.ஏவான பன்னீர்செல்வம் ஒரு மனதாகதேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதிய முதல்வர் வந்த பிறகும் கூட அரசு அலுவலகங்களில் அவரது படம்மாட்டப்படவில்லை. பதிலாக பழைய முதல்வரான ஜெயலலிதாவின் படங்கள்தான்பிரதானமாக இருந்து வந்தது. உச்சகட்டமாக சென்னைமாநகராட்சி ஆணையர்ஆச்சார்யலு தனது டேபிளிலேயே ஜெயலலிதாவின் படத்தை வைத்திருக்கிறார்.

இதுதவிர போலீஸ் கமிஷனர் அலுவலகம், டிஜிபி அலுவலகம் உள்ளிட்ட பல அரசுஅலுவலகங்களிலும் ஜெயலலிதாவின் படமே இருந்து வருகிறது.

இதேபோல தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகங்களில் ஜெயலலிதாவின் படம்முன்பு அகற்றப்பட்டு இருந்தது. தற்போது அவை மீண்டும் மாட்டப்பட்டுள்ளன.

இதற்கிடையே, ஜெயலலிதாவின் படங்கள் நீடித்து வருவது குறித்து சர்ச்சைஎழுந்துள்ளதால், தமிழக அரசு அலுவலகங்களில் முதல்வர் பன்னீர்செல்வம் படம்மாட்டப்படவுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) சென்னை தலைமை செயலகத்திலுள்ள செய்தி மக்கள்தொடர்ப்புத்துறை உதவி இயக்குனர் டி. இளங்கோவன், மக்கள் தொடர்பு அதிகாரிஸ்ரீநாகேஷ் ஆகியோர் அறைகளில் முதல்வர் பன்னீர்செல்லவத்தின் படம்மாட்டப்பட்டது.

மற்ற அரசு அலுவலகங்களிலும் முதல்வர் பன்னீர்செல்வத்தின் படம் மாட்டப்படஉள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முதல்வரின்புகைப்படம் மாநிலச் செய்தி நிலையம் மற்றும் அனைத்து மாவட்ட செய்தி மக்கள்தொடர்பு அலுவலகங்களிலும் வரும் திங்கள்கிழமை (8ம் தேதி) முதல் கிடைக்கும்.

அரசுத்துறை மற்றும் அரசு சார்பு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மேற்குறிப்பிட்டுள்ளஅலுவலகங்களிலிருந்து முதல்வரின் புகைப்படத்தை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+