புயலிலிருந்து தப்பியது சென்னை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த புயல் சின்னம் ஆந்திராவை நோக்கி நகர்ந்து விட்டதால், புயல்அபாயத்திலிருந்து சென்னை தப்பியது.
வங்கக் கடலின் தெற்கே ஆந்திரா மற்றும் சென்னைக்கு மத்தியில் குறைந்த காற்றழுத்த மண்டலம்உருவாகியிருந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வட கடலோரப் பகுதிகளில் கடந்த இரண்டுநாட்களாக கன மழை பெய்து வந்தது.
இந்த நிலையில் தற்போது புயல் சின்னம் ஆந்திர மாநில கடற்கரை நோக்கி நகர்ந்து சென்று விட்டது. இதனால்சென்னையை புயல் தாக்கும் அபாயம் நீங்கி விட்டது.
இருப்பினும் ஆந்திர கடற்கரை நோக்கி புயல் சின்னம் நகர்ந்து வருவதால் சென்னை உள்ளிட்ட வட பகுதிகளில்இன்னும் 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் பலத்த மழை பெய்யலாம் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம்எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications