For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொல்கத்தாவில் ஜப்பானிய ராணுவ விமானங்கள்

By Staff
Google Oneindia Tamil News

கொல்கத்தா:

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உணவுப் பொருள்களைப் போடுவதற்காக வந்த ஜப்பானிய ராணுவ விமானங்கள் கொல்கத்தாவிமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பிக் கொண்டு சென்றன.

சி-130 ஹெர்குலிஸ் ரகத்தைச் சேர்ந்த பிரம்மாண்டமான 2 விமானங்கள் திங்கள்கிழமை காலை 9.45 மணிக்கு கொல்கத்தாவில்தரையிறங்கியது. அடுத்த 20 நிமிடத்தில் இரண்டாவது விமானம் வந்து சேர்ந்தது.

இரண்டுக்கும் எரிபொருள் நிரப்பப்பட்டது.

பின்னர் இரு விமானங்களும் டெல்லி வழியாக பாகிஸ்தானில் உள்ள குவேட்டா விமான நிலையத்துக்குப் புறப்பட்டுச் சென்றன.

மேலும் 4 விமானங்கள் இன்று கொல்கத்தா வரும் என்று தெரிகிறது.

இரண்டாவது உலகப் போருக்குப் பின் இந்த விமான நிலையத்தில் ஒரு வெளிநாட்டு ராணுவ விமானம் வந்திறங்குவது இதுவேமுதல் முறையாகும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X