எந்தத் தொகுதியில் போட்டி? - புதுவை முதல்வர் விளக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாண்டிச்சேரியில் எந்த சட்டசபைத் தொகுதியில் தான் போட்டியிடுவேன் என்பதை 10ம் தேதி டெல்லியில்அறிவிக்கவுள்ளதாக பாண்டிச்சேரி முதல்வர் ப.சண்முகம் கூறியுள்ளார்.
பாண்டிச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
டெல்லியில் 10ம் தேதி நடக்கவுள்ள காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன். அந்தக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்திக்கும்போது நான் போட்டியிடும் தொகுதி குறித்துஅறிவிப்பேன்.
நான் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதில் எந்தக் குழப்பம் இல்லை. அதை யாரும் எதிர்க்கவுமில்லை.நான்தான் இன்னும் தொகுதியை முடிவு செய்யவில்லை. தொகுதியை முடிவு செய்த பிறகே அதை அறிவிக்க முடியும்என்றார் அவர்.












Click it and Unblock the Notifications