ஆப்கானிஸ்தான் மீது மீண்டும் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
காபூல்:
மூன்றாவது முறையாக அமெரிக்க-பிரிட்டிஷ் ராணுவ விமானங்கள் இன்று அதிகாலை ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தின.
மூன்றாவது தாக்குதல் மிக பயங்கரமாக இருந்ததாக ஆப்கான் இஸ்லாமிக் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதல் கட்ட மற்றும் இரண்டாவது கட்டத் தாக்குதலில் அதிபர் மாளிகை, காபூல் ரேடியோ ஆகியவையும் தாக்கப்பட்டன.
25 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், தரையிலிருந்து ஏவுகணைச் செலுத்தும் 15 வாகனங்கள், ஏவுகணைகள் செலுத்தும்நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவை ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதலில் பயன்படுத்தப்பட்டன.












Click it and Unblock the Notifications