ஆப்கானிஸ்தான் மீது பகலிலும் குண்டு வீச்சு: 4 பேர் பலி
காபூல்:
ஆப்கானிஸ்தான் மீது மூன்றாவது நாளாக இன்று பகலிலேயே குண்டு வீச்சு தாக்குதலை அமெரிக்கா நடத்தி வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாக இரவில் ஏவுகணைகளையும், குண்டுகளையும் வீசித் தாக்கி வந்த அமெரிக்கா இன்று (செவ்வாய்க்கிழமை)காலையிலேயே தாக்குதலை ஆரம்பித்துவிட்டது.
தொடர்ந்து அங்கு தாக்குதல் நடந்து வருகிறது. இந்திய நேரப்படி காலை 5.50 மணிக்கு தலைநகர் காபூல் மீது ஜெட் விமானம் குண்டுகளைவீசியது. விமான நிலையத்தைக் குறி வைத்து இத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இரவில் அமெரிக்க விமானங்கள் தாக்குவதால் முழித்து இருந்து வீடுகளை விட்டு ஒதுங்கி பதுங்கி வாழ்ந்துவிட்டு பகலில் தான்பெரும்பாலான ஆப்கானியர்கள் தூங்குகின்றனர். ஆனால், இன்று நடத்தப்பட்ட தாக்குதல் அவர்களை தூக்கத்திலிருந்து எழுப்பியது.
இதையடுத்து விமான எதிர்ப்பு பீரங்கிகள் மூலம் தலிபான்கள் விமானத்தை நோக்கி சுட்டனர்.
இந்த விமானம் தொடர்ந்து குண்டு வீசிக் கொண்டிருந்தபோதே நகரின் கிழக்குப் பகுதியில் அமெரிக்க ஏவுகணைகள் வந்து தாக்கஆரம்பித்தன. நேற்று இரவிலும் 3 பெரும் குண்டுகள் காபூல் மீது வீசப்பட்டன.
இதில் ஐக்கிய நாடுகள் சபை சார்பில் பணியாற்றி வந்த 4 ஆப்கானியர்கள் கொல்லப்பட்டனர் என வசீர் அக்பர் கான் மருத்துவமனைடாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் ஒரு நபர் காயமடைந்தார். இவர்கள் 5 பேரும் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் ஆப்கானிஸ்தானில்கண்ணி வெடிகளை நீக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் காபூலில் உள்ள டி.வி, ரேடியோ டவரும் சிதைக்கப்பட்டது.
ஒரு குண்டு பெண்கள் மருத்துவமனை அருகே விழுந்தது. ஆனால், இதில் மருத்துவமனைக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை.
காண்டஹார் மீதும் தாக்குதல்:
காண்டாரிலும் நேற்று இரவிலும் இன்று காலையிலிலும் தொடர்ந்து தாக்குதல் நடந்தது. இந் நகரை பல போர் விமானங்கள் சுற்றிச் சுற்றிச்வந்து குண்டு மழை பொழிந்தன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications