வன்முறையைத் தூண்ட அதிமுக சதி: அத்வானிக்கு திமுக கடிதம்
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலின்போது வன்முறையைத் தூண்டி திமுகவினர் மீது தாக்குதல் நடத்த அதிமுக தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாக மத்தியஉள்துறை அமைச்சர் அத்வானிக்கு திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அன்பழகன் எழுதியுள்ள கடிதத்தில், அதிமுக இரண்டாம் கட்டத் தலைவர்களான ஆதிராஜாராம், கராத்தே தியாகராஜன்போன்றவர்கள் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் வன்முறையைத் தூண்டும் விதமாகபேசி வருகின்றனர். திமுகவினரைத் தாக்குமாறும்,கலவரத்தைத் தூண்டுமாறும் அவர்கள் பேசி வருவதாகத் தெரிகிறது.
போலீஸாரைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், அவர்கள் அதிமுகவினருக்குத்தான் சாதகமாக இருப்பார்கள் என்றும் அவர்கள் பேசிவருவதாகத் தெரிகிறது. தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்ற வேகத்தில் அவர்கள் வன்முறையைத் தூண்டும்விதமாக செயல்பட்டு வருகிறார்கள்.
தேர்தல் நாளன்று கலவரத்தை உருவாக்க அவர்கள் திட்டமிட்டுள்ளார்கள். தேர்தல் நாளன்று சென்னையில் இருந்தால் தாக்கப்படுவீர்கள்,எனவே எங்காவது சென்று விடுங்கள் என்று திமுகவினரை அவர்கள் மிரட்டி வருகிறார்கள்.
திமுக பேரணியின்போது அதிமுகவினரோடு, போலீஸாரும் சேர்ந்து கொண்டதைப் போல இப்போதும் நடந்து விடுமோ என்றுஅஞ்சுகிறேன். எனவே தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் தேர்தல் அமைதியாக நடக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கடிதத்தில் அன்பழகன் கூறியுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications