நிலக்கரி ஊழல்: தனி நீதிமன்றத்தில் ஆஜராக ஜெ. மறுப்பு
சென்னை:
நிலக்கரி ஊழல் வழக்கு தொடர்பாக வரும் 10ம் தேதி தனி நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என்று முன்னாள்முதல்வர் ஜெயலலிதா தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நிலக்கரி இறக்குமதி செய்ததில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ரூ.6.5 கோடி ஊழல் நடந்ததாக ஜெயலலிதா,அப்போதைய அமைச்சர் கண்ணப்பன் உள்பட 10 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
குற்றவியல் சட்டப்படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் தனி நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகி, நீதிபதியின்கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
ஜெயலலிதா, கண்ணப்பன் தவிர மற்ற 8 பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகி, நீதிபதியின் கேள்விகளுக்குப் பதில்அளித்தனர். இன்று கண்ணப்பனும் பதில் அளிக்கவுள்ளார். நாளை ஜெயலலிதாவும் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜெயலலிதா தரப்பில் தனி நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அம்மனுவில்ஜெயலலிதா கூறியிருப்பதாவது:
என்னுடைய சொந்தப் பிரச்சினைகள் காரணமாகவும், உள்ளாட்சித் தேர்தல் காரணமாகவும் என்னால் 10ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது. எனவே அதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், நான் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாலும், என்னுடைய பாதுகாப்பை முன்னிட்டும் அன்று நான்ஆஜராக முடியாது.
கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராகாமலேயே உச்ச நீதிமன்றம்தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே என்னுடைய வழக்கறிஞர் மூலமாகவே என்னுடைய பதில்கள்அளிக்கப்பட அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த மனுவில் கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications