பாகிஸ்தானிடம் பிடிபட்ட 3 ஆப்கானிஸ்தான் ஹெலிகாப்டர்கள்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

தனது எல்லையருகே தரையிறங்கிய 3 ஆப்கானிஸ்தான் ஹெலிகாப்டர்களை பாகிஸ்தான் ராணுவம் பறிமுதல் செய்தது.

நேற்று இந்த ஹெலிகாப்டர்கள் பாகிஸ்தான் எல்லை நோக்கி பறந்து வருவதை அமெரிக்க கடற்படையின் கண்காணிப்பு விமானங்கள்கண்டுபிடித்தன. உடனடியாக பாகிஸ்தான் ராணுவத்துக்குத் தகவல் தந்தனர் அமெரிக்க விமானிகள்.

இந்த ஹெலிகாப்டர்களை வழிமறித்து தரையிறக்க வேண்டும் அல்லது தரையிறங்கியவுடன் பறிமுதல் செய்ய வேண்டும் என பாகிஸ்தான்ராணுவத்திடம் அமெரிக்கா கேட்டுக் கொண்டது.

இந் நிலையில் 3 ஹெலிகாப்டர்களும் பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் தரையிறங்கின. உடனடியாக அவற்றைபாகிஸ்தான் ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர்.

பிடிபட்ட அந்த ஹெலிகாப்டர்களை பறிமுதல் செய்தனர். அவற்றை ஓட்டி வந்த தலிபான் பைலட்களையும் ராணுவத்தினர் அழைத்துச்சென்றனர். அவர்கள் கைது செய்யப்பட்டார்களா என்பது குறித்து விவரம தெரியவில்லை.

இந்த ஹெலிகாப்டர்கள் ஆப்கானிஸ்தானின் பக்தியா மகாணத்திலிருந்து பறந்து வந்துள்ளன.

அமெரிக்கா தாக்குதலில் இந்த ஹெலிகாப்டர்கள் சேதமடைந்துவிடலாம் என்பதால் அவற்றை ஆப்கானிஸ்தான் பாதுகாப்பான இடத்துக்குஅப்புறப்படுத்த முயன்றாகத் தெரிகிறது.

பக்தியா மாகாணத்தின் கார்டேஸ், கோஸ்ட் ஆகிய இடங்களில் இந்த ஹெலிகாப்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த இடங்களைஅமெரிக்கா தாக்க ஆரம்பித்துள்ளதால் ஹெலிகாப்டர்களை தலிபான்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இவை பாகிஸ்தானில் தரையிறஙங்கியவுடன் அவற்றை ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். ஆனால், இதற்கு அந்தப் பகுதியைச் சேர்ந்ததலிபான் ஆதரவு ஆதிவாசிகள் எதிரிப்புத் தெரிவித்தனர். ஆனால், அவர்களை மிரட்டி விரட்டிய பின்னர் தான் ஹெலிகாப்டர்களைராணுவம் தனது வசப்படுத்தியது.

ஆப்கானிஸ்தானுக்கு ராணுவ உதவிகள் அளித்து வந்த பாகிஸ்தானே இப்போது அந் நாட்டு ராணுவத்தின் ஹெலிகாப்டர்களை பறிமுதல்செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+