அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமானக் கடத்தல்?
லாஸ் ஏஞ்சலஸ்:
அமெரிக்காவில் லாஸ்ஏஞ்சலஸிலிருந்து சிகாகோவுக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம்கடத்தப்பட்டதாகத் தகவல் பரவியதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
லாஸ் ஏஞ்சலஸிலிருந்து 153 பயணிகளுடன் ஒரு பயணிகள் விமானம் சிகாகோவுக்குச் சென்று கொண்டிருந்ததது.விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் அதை ஒருவன் கடத்தியிருப்பதாக, அந்த விமானத்தின்விமானிகளிடமிருந்து கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து, இது தீவிரவாதிகளின் செய்கையாக இருக்குமோ என்று அஞ்சிய பாதுகாப்புப் படையினர் இரண்டுஎப்-16 ரக போர்விமானங்கள் மூலம் கடத்தப்பட்ட விமானத்தைச் சூழ்ந்து சென்றனர்.
கடந்த முறையைப் போல ஏதாவது பெரிய கட்டிடத்தின் மீது மோதச் சென்றால், அந்தப் பெரிய ஆபத்தைத் தவிர்க்கஅந்த விமானத்தை நடுவானில் சுட்டுவீழ்த்தும் நோக்கில் அந்தப் போர்விமானங்கள் சென்றுகொண்டிருந்தன.
இதற்கிடையில் விமானத்தின் காக்பிட் அறைக்குள் கடத்தல்காரன் நுழைந்துகொண்டு விமானிகளிடம் கைகலப்பில்ஈடுபட்டிருக்கிறான். பிறகு ஒரு வழியாக அந்த விமானம் பத்திரமாக சிகாகோவில் தரையிறக்கப்பட்டது.
உடனே பாதுகாப்பு படையினர் விமானத்துக்குள் புகுந்து அந்த கடத்தல்காரனைப் பிடித்து விசாரித்ததில் அவன்தீவிரவாதி இல்லை என்றும், அவனுக்கு மனநிலை சரியில்லை என்றும் அறிந்துகொண்டனர்.
அதன் பிறகே பீதியடைந்த பொதுமக்களும், பயணிகளும் ஒருவழியாக அமைதியடைந்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications