நாவரசு கொலை வழக்கு - விடுதலையானார் ஜான் டேவிட்
கடலூர்:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பு படித்துவந்த நாவரசு என்ற மாணவன்கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலிருந்த ஜான் டேவிட் நேற்றுவிடுதலை செய்யப்பட்டார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமியின் மகன் நாவரசு. இவர் சிதம்பரம்அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவப்படிப்புப் படித்துவந்தார்.
இதே கல்லூரியில் சீனியராக படித்துவந்த ஜான்டேவிட் என்பவர் நாவரசுவைக் கொடூரமான முறையில்கொலைசெய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிங்காரவேலன் ஜான் டேவிட்டுக்குஇரட்டை ஆயுள் தண்டனை கொடுத்துத் தீர்ப்பளித்தார்.
இதையடுத்து கடந்த 1996ம் ஆண்டு முதல் ஜான் டேவிட் கடலூர் மத்தியச் சிறையில் இருந்துவந்தார். தான்குற்றமற்றவர் என்றும் தனக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனையை ரத்துசெய்யவேண்டும் என்றும் கோரி சென்னைஉயர் நீதிமன்றத்தில் இவர் அப்பீல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசவாரித்த உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், ஜான் டேவிட் மீது சாட்டப்பட்டக் குற்றச்சாட்டுகளுக்குஅரசு தரப்பில் முறையான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறி அவரை விடுதலை செய்யஉத்தரவிட்டது.
இதையடுத்து அவர் நேற்று (திங்கள்கிழமை) நண்பகல் 12.00 மணிக்கு, கடலூரி சிறையிலிருந்து விடுதலைசெய்யப்பட்டார்.
கையில் பைபிளுடனும், முகத்தில் தாடி, மீசை, மூக்குக்கண்ணாடியுடனும் தளர்ந்த நடையோடு வெளியில் வந்தார்ஜான்டேவிட். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
பீரங்கிமுனையைவிட பேனா முனை வலுவானது. எனவே எதையாவது எழுதி என் வாழ்க்கையைவீணாக்கிவிடாதீர்கள்.
தயவு செய்து என்னை வாழவிடுங்கள். நான் குற்றமற்றவன் என்பதை அறிந்து கர்த்தர் என்னைக்காப்பாற்றியுள்ளார்.
மீண்டும் நான் கல்லூரியில் சேர்ந்து என் மருத்துவப் படிப்பைத் தொடர்வேன் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications