மயிரிழையில் தப்பிய முல்லா ஒமர்
இஸ்லாமாபாத்:
காண்டஹாரில் உள்ள தலிபான் தலைவர் முல்லா முகம்மத் ஒமரின் வீட்டின் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல் நடப்பற்கு 15நிமிடத்துக்கு முன்பு தான் அவர் அங்கிருந்து தப்பினார் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
சயீப் கூறுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒமரின் வீட்டின் மீது அமெரிக்க ஏவுகணை வந்து விழுவதற்கு 15 நிமிடத்துக்கு முன்பே அவர்அங்கிருந்து வெளியேறிவிட்டார். கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், ஒமர் பாதுகாப்பாக இருக்கிறார். தாக்குதலில் இருந்துதப்பிவிட்டார். இப்போது தான் அவருடன் பேசிவிட்டு வருகிறேன்.
அமெரிக்கத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். காபூல், காண்டஹார், ஜலாலாபாத் நகர்களில் நடந்த அமெரிக்கத்தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களின் வீடுகள் தகர்க்கப்பட்டுள்ளன.
ஒசாமா பின்லேடன் தான் அமெரிக்காவில் விமானக் கடத்தலை நடத்தி கட்டடங்களைத் தகர்த்தார் என்பதற்கான ஆதாரங்களைஅமெரிக்காவிடம் கேட்டோம். ஆனால், அவர்கள் ஆதாரங்களுக்குப் பதிலாக போர் விமானங்களையும் குண்டுகளையும்ஏவுகணைகளையும் தருகிறார்கள் என்றா சயீப்.
மேலும் ஒருவர் சாவு:
இந் நிலையில் அமெரிக்க விமானங்கள் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மீது பகலிலும் தாக்குதல் நடத்தின. போர் கப்பல்களில் இருந்துஏவுகணைகளும் ஆப்கானை நோக்கி பாயந்தன.
இன்று காண்டஹாரிலும் அதன் அருகில் உள்ள மய்வாண் நகரின் மீது காலையில் தாக்குதல் நடந்தது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார்.மய்வாண் நகரில் உள்ள பின்லேடன் முகாம்கள் மீது அமெரிக்கா இத் தாக்குதலை நடத்தியது. இதில் ஒரு முகாம் அழிக்கப்பட்டது.
காண்டஹாரைத் தாக்க வந்த பல அமெரிக்க விமானங்கள் தாக்குதலை நடத்த முடியாமல் திரும்பிவிட்டதாகத் தெரிகிறது. தலிபான்கள்நடத்திய மிகக் கடுமையான விமான எதிர்ப்பு பீரங்கி தாக்குதல்களையடுத்து பல அமெரிக்க விமானங்கள் காண்டஹாரின் மீது பலமுறைசுற்றிவிட்டு குண்டு ஏதும் வீசாமல் திரும்பிவிட்டன என முல்லா ஒமரின் செய்தித் தொடர்பாளர் அப்துல் ஹய் முட்டமீன் கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications