பாகிஸ்தானில் மேலும் ஒரு காவல் நிலையம் எரிப்பு
Subscribe to Oneindia Tamil
குவெட்டா:
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதை எதிர்த்து இரண்டாவது நாளாக இன்றும் பாகிஸ்தானில் தொடர்ந்து வன்முறைநடந்து வருகிறது.
ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள குவேட்டாவுக்குள் நுழைய முயன்ற 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
தங்கள் தலைக்கு மேல் அமெரிக்க, பிரிட்டன் விமானங்கள் பறப்பதைப் பார்த்த அவர்கள் வெறி பிடித்தது போல போலீசாரைத் தாக்கினர்.அருகே இருந்த காவல் நிலையத்துக்கும் தீ வைத்தனர்.
இதையடுத்து போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் மூண்டது. போலீசார் தாக்கியதில் பலர் காயமடைந்தர் என பலுசிஸ்தான்மாகாண உள்துறைச் செயலாளர் அஸ்மத் ஹனிஸ் ஒரகாஸி கூறினார்.
இச் சம்பவம் தொடர்பான 37 பேர் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications