இராமேஸ்வரம் கோயில் திருப்பணி ஆரம்பம்
இராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் வடக்கு மற்றும் தெற்கு கோபுரங்கள் புதுப்பிக்கும் பணி இன்றுஆரம்பமாகிறது.
இதுகுறித்து திருக்கோயில் ஆணையாளர் நிருபர்களிடம் கூறுகையில்,
இராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழாநடைபெற்றுவந்தது.
ஆனால் கடந்த முறை 26 ஆண்டுகள் கழித்து கடந்த பிப்ரவரி மாதம் தான் கிழக்கு ராஜகோபுரம் புதுப்பிக்கப்பட்டு,குடமுழுக்கு விழா நடைபெற்றது.
மேலும் தற்போது வடக்கு மற்றும தெற்கு ராஜகோபுரங்களைப் புதுப்பிக்க காஞ்சி காமகோடி பீடாதிபதி சுவாமிவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முயற்சித்து வருகிறார்.
பொதுமக்கள் மற்றும் செல்வந்தர்களிடமும், வெளிநாட்டில் வசிக்கும் இந்துக்களிடம் இருந்தும் ஏராளமானஅளவில் நன்கொடை வசூலித்து கோயில் திருப்பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கோபுரங்கள் புதுப்பிக்கும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. விரைவில் இந்தப் பணிமுடிக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications