தீவிர பிரசாரத்தில் ஸ்டாலின்
சென்னை:
சென்னை மாநகர மேயர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், தற்போதைய மேயருமான மு.க.ஸ்டாலின்திங்கள்கிழமை சென்னையின் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
காலை 7 மணியளவில் தனது பிரசாரத்தை ஆர்.கே. நகரில் துவக்கினார். பல்வேறு பகுதிகளில் திறந்த ஜீப்பில்சென்றவாறு அவர் ஓட்டுக் கேட்டார். அவருடன் திமுக மற்றும் தோழமைக் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் உடன்சென்றனர்.
ஹரி நாராயணபுரம், அம்பேத்கர் ரோடு, பாரதி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஸ்டாலின் வாக்கு கேட்டார்.தொடர்ந்து பல தெருக்கள், சாலைகளில் ஸ்டாலின் ஓட்டு கேட்டவாறு சென்றார்.
முன்னதாக ஸ்டாலினின் பிரசாரத்தை முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியன், எம்.பி குப்புசாமி ஆகியோர் துவக்கிவைத்தனர்.
செவ்வாய்க்கிழமை சைதாப்பேட்டை பகுதியில் ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். காலை 7 மணிக்குஜாபர்கான்பேட்டை அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, தனது பிரசாரத்தை துவக்கும் ஸ்டாலின், மாலையில்சர்தார் பட்டேல் சாலையில் பிரசாரத்தை முடித்துக் கொள்கிறார்.
இந்த பிரசாரத்தின்போது சைதை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சைதை கிட்டுவும் உடன் செல்கிறார்.பிரசாரத்திற்கான ஏற்பாடுகளை சைதை பகுதி திமுக செயலாளர் ஆர்.எஸ். ஸ்ரீதர் ஏற்பாடு செய்துள்ளார்.
புதன்கிழமை சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார் ஸ்டாலின்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications