சுவாமி மீதான வழக்கு விசாரணக்கு ஏற்பு
பெங்களூர்:
சுப்ரமணியம் சுவாமி மீது கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்று,நவம்பர் 26ம் தேதிக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று போலீஸ் அதிகாரிக்கு நீதிபதிஉத்தரவிட்டார்.
கர்நாடக மாநிலம் பெங்களூர் மாநகராட்சி 85-வது வார்டு கென்சிங்டன் சாலையில் உள்ள அக்வா போர்டேஅபார்ட்மென்ட்டில் உள்ள ஒரு வீடு ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமிக்குச் சொந்தமானது.
ரூ.80 லட்சம் மதிப்புள்ள இந்த வீடு விற்கப்பட்டபோது, அதன் மதிப்பைக் குறைத்துக்காட்டி வரி ஏய்ப்புசெய்யப்பட்டுள்ளதாக வழக்குத் தொடரடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சுவாமி, கர்நாடக மாநில ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பையா ஷெட்டி, அந்த வீட்டை வாங்கியடாக்டர் ஆலன் பிண்டோ ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பெங்களூர் 10-வது கூடுதல் முதன்மைமெட்ரோபாலிட்டன் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில், இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதி மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதுடன், வரும் நவம்பர் 26ம் தேதிக்குள் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை செய்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று போலீஸ்அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
இதுகுறித்து வழக்குத தொடர்ந்த புகழேந்தி கூறுகையில்,
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உட்பட பலர் மீது பொய் வழக்கு தொடர்ந்ததோடு, தன் மீது யாராலும்வழக்குத் தொடர முடியாது என்று இறுமாப்புடன் திரியும் சுவாமி, இந்த வழக்கில் இருந்து தப்பமுடியாது.
அவர் வரி ஏய்ப்பு செய்ததற்குப் போதுமான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. மேலும் நாடு முழுவதும்சொத்துக்கள் உள்ளன. அதை ஒன்றன்பின் ஒன்றாக அம்பலப்படுத்துவோம் என்றார்.
-
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications