டான்சி வழக்கு: "பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் சாட்சியம் தவறு"
சென்னை:
டான்சி வழக்கில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி லத்திகா படால்கரின் சாட்சியம் தவறானது என்று முன்னாள் அமைச்சர்முகமது ஆசிப்பின் வழக்கறிஞர் வாதாடினார்.
டான்சி வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி தினகர் முன்னிலையில் நடந்து வருகிறது.
ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்பு வாதங்கள் அனைத்தும் கடந்த வாரமே முடிந்துவிட்ட நிலையில், முன்னாள்அமைச்சர் ஆசிப் தரப்பு வாதங்கள் நேற்று (திங்கள்கிழமை) துவங்கின.
ஆசிப்பின் வழக்கறிஞர் அசோகன் தன்னுடைய வாதத்தின்போது கூறியதாவது:
டான்சி வழக்கில், பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி லத்திகா படால்கர் தனி நீதிமன்றத்தில் கூறிய சாட்சியம் ஏற்கக் கூடியதுஅல்ல.
1992ல் டான்சி நிலத்தின் ஒரு பகுதி ஜெயா பப்ளிகேஷனுக்கு விற்பதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு பைலை, முதல்வர்உள்பட பலருக்கும் அனுப்பி வைத்துள்ளோம் என்று குறிப்பு எழுதி வைத்துள்ளதாக லத்திகா சாட்சியம்அளித்துள்ளார்.
இவ்வாறு குறிப்பு எழுதியதற்காக பின்னர் ஆசிப் தன்னைத் திட்டினார் என்றும், இந்தக் குறிப்புகள் அடித்துவைக்கப்பட்டுள்ளன என்றும் சாட்சியம் அளித்துள்ளார் லத்திகா.
இந்தச் சாட்சியம் அனைத்துமே தவறானதாகும். போலீசாரின் தூண்டுதல்கள் காரணமாகவே அந்த பைலில் பலதிருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்று வாதம் செய்தார் வழக்கறிஞர் அசோகன்.
வழக்கறிஞர் அசோகனின் வாதம் இன்று தொடர்ந்து நடைபெறுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications