கள்ளுக்கடைகளை திறக்க கு.ப.கி. கோரிக்கை
சென்னை:
தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தி மதுக் கடைகளை அடைக்க வேண்டும். அதற்குப் பதிலாக கள்ளுக் கடைகளைத் திறக்கவேண்டும் என்று தமிழர் பூமி கட்சியின் தலைவரும் மாஜி மந்திரியுமான கு.ப.கிருஷ்ணன் கூறியுள்ளார்.
கடந்த ஜெயலலிதா ஆட்சியில் விவசாயத்துறை அமைச்சராக இருந்தவர் கு.ப.கிருஷ்ணன்.
சென்னை விஷச்சாராய சம்பவம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஷச்சாராய சாவுகளைத் தடுப்பதற்கு ஒரே வழிதமிழகத்தில் பூரண மது விலக்கை அமல் செய்வதுதான்.
சென்னை கோட்டூர் காலனி பகுதியில் நடந்த விஷச்சாராய சம்பவம் மனதை நெகிழ வைப்பதாக உள்ளது. ஆனால் இது அவ்வப்போதுநடந்து வருவது வேதனை தருகிறது. இதுபோன்ற துயரச் சம்பங்கள் நடக்கும் போதெல்லாம், காவல்துறையினரை இடமாற்றம் செய்வதும்,இழப்பீடு தருவதும் மட்டுமே தவறாமல் நடந்து வருகிறது. பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படுவதில்லை.
மதுக்கடைகளைத் திறந்து விட்டு மறுபுறம் கள்ளுக் கடைகளை அரசு மூடியுள்ளது. இது இரட்டை வேடமாகும். மதுவிலக்கு என்றால்எதுவுமே இருக்கக் கூடாது.கள்ளுக் கடைகள் நடத்துவது பாவம் என்றால் பிறகு மதுக் கடைகளை மட்டும் நடத்துவதில் நியாயம் உள்ளதா?
எனவே உடனடியாக கள்ளுக் கடைகளைத் திறந்து ஏழை மக்களின் உயிர்களை அரசு காக்க வேண்டும், இல்லாவிட்டால் மதுக் கடைகள்அனைத்தையும் உடனே மூடி விட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications