தமாகா-காங்கிரஸ் இணைப்பு இல்லை: வாசன்
கோயம்புத்தூர்:
தமிழ் மாநில காங்கிரசை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கோயம்புத்தூரில் நிருபர்களிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) கூறியதாவது:
தமாகாவைப் பலப்படுத்துவதற்காக, நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப் போகிறேன். மாவட்டவாரியாக கட்சியின் நிலையை நன்கு ஆராய்ந்து, முடிந்தால் மாவட்ட நிர்வாகிகளையும் மாற்றி கட்சியைப்பலப்படுத்துவேன். கட்சியின் தனித் தன்மையை நிலைநாட்டுவேன்.
உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு நாங்கள் 3வது அணியுடன் சேரப் போவதாக சிலர் கூறிக் கொண்டுள்ளனர்.ஆனால் அதைப் பற்றிய பேச்சுக்கே இப்போது இடமில்லை. அதே போல், காங்கிரஸ் அறக்கட்டளை எங்களதுசொந்தப் பிரச்சினை. அதுகுறித்தும் இங்கே நான் எதுவும் பேச விரும்பவில்லை.
உள்ளாட்சித் தேர்தலில் தமாகாவுக்கு குறைவாகத்தான் சீட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்று சொல்லமுடியாது. ஆனால், தற்போது கிடைத்திருப்பதை விட அதிகமான சீட்டுகள் கிடைக்க வேண்டும் யார்தான்ஆசைப்பட மாட்டார்கள்.
உள்ளாட்சித் தேர்தலில், தமாகாவுக்குள்ளேயே சில அதிருப்தியாளர்கள் எங்களுக்கு எதிராக வேட்புமனு தாக்கல்செய்தனர் என்பது உண்மைதான். ஆனால், அவர்கள் தற்போது மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர். எல்லாம்சுமூகமாக முடிவடைந்து விட்டது.
கடந்த 5 மாதங்களாக தமிழகத்தை ஆளும் அதிமுக, திருப்திகரமாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. குறுகியகால கட்டத்திலேயே ஏராளமான நலத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ளன. காவிரிப்பிரச்சினையில் தமிழக அரசின் நிலைக்கு தமாகாவின் ஆதரவு எப்போதும் உண்டு.
ஆனாலும், சட்டசபையில் பொறுப்புள்ள ஒரு எதிர்க்கட்சியாகவே தமாகா செயல்படும். அதிமுக ஆட்சி தவறுசெய்ய நேர்ந்தால், அதைத் தட்டிக் கேட்பதற்கு தமாகா தயங்காது என்றார் வாசன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications