திண்டுக்கல்லில் 50 சாராய வியாபாரிகள் அதிரடி கைது
திண்டுக்கல்:
திண்டுகல்லில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 5 பெண்கள் உள்பட 50 சாராய வியாபாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் சென்னை கோட்டூர் அருகே விஷச்சாராயம் குடித்து 36 பேர் இறந்து போன சம்பவம் தமிழகத்தையேஉலுக்கியது. இதையடுத்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திண்டுகல்லில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சாராய வியாபாரிகள் 50 பேரை கைதுசெய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் சென்ற 2 நாட்களாக போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனைதிண்டுக்கல் மதுவிலக்கு பிரிவு கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் ஜவகர்லால் தலைமையில் நடைபெற்றது.
இவரது தலைமையிலான போலீஸ் படையினர் திண்டுக்கல்லின் வெள்ளோடு, அய்யம்பாளையம், கல்வாரிபட்டி,மத்தையூர், வேடப்பட்டி, ஆவாரம்பட்டி, முருகாத்தூரான்பட்டி, தங்கச்சியம்மாபட்டி, தாடிக்கொம்பு, வேடசந்தூர்,ஆத்துமேடு ஆகிய பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது 5 பெண் சாராய வியாபாரிகள் உள்ளிட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக 76 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சோதனையின் போது பிடிபட்ட ரூ.65 ஆயிரம் மதிப்புள்ள 650 லிட்டர் சாராயம், ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 6ஆயிரத்து 200 லிட்டர் சாராய ஊறலையும் போலீசார் அழித்தனர். சாராய வியாபாரத்திற்காக பயன்படுத்தப்பட்டுவந்த 2 மொபெட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த சோதனை குறித்து மதுவிலக்கு கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளார் ஜவகர்லால் கூறுகையில், "தற்போதுநடைபெற்றது வழக்கமான சோதனைதான். ஆனாலும் தற்போது மதுவிலக்கு போவீசாரும், மற்ற போலீசாரும்அதிக கவனத்துடன் சோதனை நடத்தி வருகிறோம். இனி வாரம்தோறும் 2 நாட்கள் சாராய வேட்டை நடத்தமுடிவெடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications