கூலிக்கு கொலை செய்யும் 5 பேர் சென்னையில் கைது
சென்னை:
சென்னை போலீஸார் பணத்திற்காக கொலைகச்ை செய்து வந்த கூலிப் படையைச் சேர்ந்த 5 பேரை கைதுசெய்துள்ளனர்.
சென்னை புறநகரான திருவான்மியூர் பகுதியில் இரவு நேரங்களில் ரவுடிகள் கத்தி,அரிவாள் போன்றஆயுதங்களுடன் சுற்றி வருவதாக சென்னை மாநகர போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து ஆணையர்முத்துக்கருப்பன், இந்த சமூக விரோதிகளை பிடிக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுதது காவல்துறை அதிகாரிகள் வரதராஜன், துரையரசன், தனபால் ஆகியோரது தலைமையில் ஒரு குழுஅமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் தனிப் படைகள் அமைத்து நகர் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்தத் தனிப் படையினர் திருவான்மியூர் லேட்டிஸ் பிரிட்ஜ் சாலையில்கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு ஆட்டோ சந்தேகத்திற்கு இடமான வகையில் அங்குவந்தது.
உடனடியாக போலீஸார் ஆட்டோவை நிறுத்தினர். ஆட்டோவில் 5 இளைஞர்கள் இருந்தனர். அவர்களிடம்கத்திகள், அரிவாள்கள் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தன.
அவர்களிடம் விசாரித்தபோது, சிவகங்கையைச் சேர்ந்த பழனி என்பவர் இந்த ஐந்து இளைஞர்களையும் சென்னைதாம்பரத்தைச் சேர்ந்த கீர்த்தி வாசன் என்பவரைக் கொலை செய்ய அமர்த்தியது தெரிய வந்தது. அவர்களது பெயர்கார்த்திக், மூர்த்தி, பாஸ்கர், சரவணன், முரளி என்று தெரிய வந்தது.
இதையடுத்து ஐந்து பேரையும் போலீஸார் கைது செய்து சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பழனியைதற்போது போலீஸார் தேடி வருகின்றனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications