உள்ளாட்சி தேர்தல் - புல்லரிக்க வைக்கும் புள்ளலூர்
சென்னை:
காஞ்சிபுரம் மாவட்டம் புள்ளலூர் கிராம மக்களின் செயல்பாடுகள் புல்லரிக்க வைக்கும் வகையில் உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது புள்ளலூர் கிராமம். இந்த கிராமம் இந்தியாவுக்கே ஒரு பாடமாக அமையும்வகையில் சத்தமே போடாமல் ஒரு சாதனையை சுதந்திரம் பெற்றது முதல் செய்து வருகிறது.
சுதந்திரத்திற்குப் பிறகு நடக்கத் தொடங்கிய முதல் உள்ளாட்சித் தேர்தல் முதல் இந்த தேர்தல் வரை இந்தக்கிராமத்தில் அரசியலுக்கு இடம் கொடுத்ததில்லை கிராம மக்கள். இங்கு போட்டியிடும் பஞ்சாயத்துத் தலைவர்கள்யாருமே அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் இல்லை.
மேலும் ஜாதிப் பாகுபாடின்றி ஒவ்வொரு முறையும் ஒரு ஜாதிக்குத் தலைவர் பதவி என்ற வகையில் இந்த மக்கள்சண்டை சச்சரவின்றி தங்கள் தலைவரை தேர்ந்தெடுத்து வருகின்றனர்.
இந்த முறையும் அதுபோலவே, அரசியல்வாதிகளின் வாடையின்றி, கொடிகள், காதைப் பிளக்கும்ஒலிபெருக்கிகளின் பிரசாரங்கள், வீடு வீடாக சென்று செயற்கையாகக் கையெடுத்துக் கும்பிட்டு ஓட்டு போடுங்கஎன்று கெஞ்சாமல் தங்களது தலைவராக தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவரை தலைவராகதேர்வு செய்துள்ளனர்.
புள்ளலூர் கிராமத்தில் இதுவரை அரசியல் கட்சிகள் எதுவுமே காலூன்றியதில்லை. இந்த ஊரில் சட்டசபைத்தேர்தலில் மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு மக்கள் வாக்களிப்பது வழக்கம். ஆனால் உள்ளாட்சித் தேர்தலில்அரசியலை சுத்தமாக ஓரம் கட்டி விடுவார்கள். அந்த ஊரைச் சேர்ந்த ஒருவரை, அவர் யாராக இருந்தாலும்,தலைவராக தேர்வு செய்வதே அவர்களது வழக்கம்.
பலறை அரசியல்வாதிகள் இங்கு அரசியல் சார்பான வேட்பாளரை நிறுத்த முயன்றபோதும் கூட கிராம மக்கள்ஒட்டு மொத்தமாக அதை நிராகரித்து விட்டனர்.
"எங்களுக்கு அரசியலே வேண்டாம். கிராமம் பயன் பெற வேண்டும். ஜாதிபாகுபாடின்றி எங்களது நோக்கங்கள்நிறைவேற வேண்டும். அதற்கு எங்கள் மக்களில் ஒருவர், ஜாதி பாகுபாடின்றி, அரசியல் சாயமின்றி தேர்வுசெய்யப்பட்டால் மட்டுமே சாத்தியம்" என்று அடித்துக் கூறுகிறார்கள் இந்த கிராமத்து மக்கள்.
சாதாரண சண்டைக்கே அரசியல் சாயம் பூசப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் அரசியல் வாடையேஇல்லாமல் ஒரு கிராமம் இருப்பது உண்மையில் ஆச்சரியமானதுதான்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications