அதிமுக தலைமை நிலைய நிர்வாகி நீக்கம்: ஜெ. அதிரடி
சென்னை:
அதிமுக தலைமை நிலைய நிர்வாகி புலவர் சங்கரலிங்கம் நீக்கப்பட்டு, அந்த இடத்திற்கு முன்னாள் நிர்வாகியானமகாலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக தலைமை நிலையத்தில் நிர்வாகியாக பதவிவகித்துவந்தவர் புலவர் சங்கரலிங்கம் என்பவராவார். இவர்அதிமுகவின் கட்சி நாளேடான நமது எம்.ஜி.ஆர். பத்திரிக்கையின் ஆசிரியராகவும் இருக்கிறார்.
இவர் கட்சியில் அமைச்சர் முதல் சாதாரணத் தொண்டர்கள் வரை பலரையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.ஜெயலலிதாவிடம் இவர் கடைபிடித்து வந்த நன்னடத்தை காரணமாக அவரிடம் சங்கரலிங்கத்திற்கு செல்வாக்குஇருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பல முறைகேடுகளில் ஈடுபட்டதாக வந்த புகார்களைஅடுத்து இவரை நீக்கவேண்டும் என்று கட்சியின் பலமட்டங்களில் இருந்தும் ஜெயலலிதாவுக்கு கோரிக்கைவிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து தற்போது இவரை இந்தப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, முன்னாள் நிர்வாகி மகாலிங்கத்தைஇந்தப்பதவியில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அமர்த்தியுள்ளார். ஆனால் சங்கரலிங்கம் நமதுஎம்.ஜி.ஆர். இதழின் ஆசிரியராக தொடர்ந்து நீடிக்கிறார்.
மகாலிங்கம் எம்.ஜி.ஆர். காலத்திலிந்து கடந்த 1996ம் ஆண்டு வரை இந்தப் பதவியில் இருந்துள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது. 1996ம் ஆண்டு இவர் மீத கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுத்து இவர் அப்பதவியில் இருந்துநீக்கப்பட்டு, வேறுபதவி எதுவும் வழங்கப்படாமல் இருந்தார்.
தற்போது மீண்டும் இவரும், மனோகரன் என்பவரும் கட்சியின் தலைமை நிலைய நிர்வாகிகளாகநியமிக்கப்ட்டுள்ளதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications