அமெரிக்க நகரங்களைத் தகர்க்கப் போவதாக பின் லேடன் மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

ஆப்கானிஸ்தானைத் தாக்குவதை அமெரிக்கா நிறுத்தாவிட்டால், அமெரிக்கா மட்டுமல்லாது உலகம் முழுக்க உள்ளஅமெரிக்கர்களின் மேல் தாக்குதல் நடத்தப்படும் என்று ஒசாமா பின் லேடனின் அல்-க்வேதா இயக்கம்மிரட்டியுள்ளது.

"ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் வரை நாங்கள் புனிதப் போரைத் தொடரஉள்ளோம்" என்று தலிபான்களும் கூறியுள்ளனர்.

"செப்டம்பர் 11ல் அமெரிக்காவில் நடத்தப்பட்ட தாக்குதல்களைப் போலவே, அமெரிக்காவின் முக்கிய நகரங்கள்மீது தாக்குதல் நடத்தப்படும். மேலும், உலகெங்கிலும் உள்ள அமெரிக்காவுக்குச் சொந்தமான இடங்கள் மீதும்பலத்த தாக்குதலை நடத்துவோம்" என்று அல்-க்வேதா இயக்கம் கூறியுள்ளது.

"உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் உயிர்த்தியாகம் செய்யத் தயாராகஇருக்கிறார்கள்" என்றும் அந்த இயக்கம் கூறியுள்ளது.

இதற்கிடையே "புனிதப் போர்" (ஜிகாத்) நடத்துவதற்காக பின் லேடனுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைநீக்கியிருப்பதாக தலிபான் அரசு கூறியுள்ளது.

"அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருப்பதால், இனியும் பின் லேடன் பொறுத்துக் கொண்டிருப்பதுநல்லதல்ல என்று கருதுகிறோம். அதனாலேயே அவர் புனிதப் போர் மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்ததடைகளை நீக்கியுள்ளோம்" என்று தலிபான் அரசு தெரிவித்தது.

அமெரிக்க நகரங்கள் தாக்கப்படும் என்று அல்-க்வேதா இயக்கம் மிரட்டியுள்ளதைத் தொடர்ந்து, அமெரிக்காமுழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+