போலி கிரெடிட் கார்டுகள் - சென்னையில் 3 இலங்கை வாலிபர்கள் கைது
சென்னை:
போலி கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஏமாற்றி பொருள்களை வாங்கி வந்த இலங்கையைச் சேர்ந்த 3 பேரைபோலீசார் கைது செய்தனர்.
சென்னையில் இந்தியா மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் வழங்கியதைப் போல போலியான கிரெடிட் கார்டுகளைப்பயன்படுத்தி கடைகளில் சிலர் ஏமாற்றிப் பொருள் வாங்கி வருவதாக போலீசாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து திருவான்மியூர் இன்ஸ்பெக்டர் கருணாநிதி தலைமையில் தனிப் போலீஸ் படை அமைக்கப்பட்டது.இந்நிலையில் திருவான்மியூர், திருவள்ளுவர் நகர் பகுதியில் சந்தேகத்தின் பேரில் ஜெகன்மோகன், சுதர்சன் மற்றும்பாலசுப்ரமணி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் இவர்களை விசாரித்ததில், அவர்கள் இதுபோன்ற போலி கிரெடிட் கார்டுகளை வைத்துக்கொண்டு மோசடிசெய்து வருவது தெரிய வந்தது.
மேலும் அவர்களிடமிருந்து சில வெளிநாட்டு மற்றும இந்திய வங்கிகள் அளித்தது போன்ற கிரெடிட் கார்டுகள், 3செல் போன்கள், போலி பாஸ்போர்ட் நகல்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இதே கும்பலைச் சேர்ந்த ராகுல், மனோஜ் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களைப் போலீசார்தீவிரமாகத் தேடிவருகின்றனர். இந்த 2 பேரும் ஏற்கனவே இதே குற்றத்திற்காக போலீசிடம் சிக்கித் தண்டனையும்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications