தண்ணீர் தர மறுத்த கர்நாடகத்திற்கு தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம்
தஞ்சாவூர்:
தமிழகத்திற்கு கர்நாடக அரசு காவிரி நீர் திறந்துவிட மறுத்ததற்கு தமிழக விவசாயிகள் சங்கம் கடும்கண்டனம்தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியில் பயிரிடப்பட்டுள்ள குறுவை பயிர்களை காப்பாற்ற காவிரியில் கர்நாடகாதிறந்துவிட வேண்டிய நீரை திறந்து விட வேண்டும் என்று வற்புறுத்தவும், இது குறித்து விவாதிக்கவும், நேற்று(புதன்கிழமை) டெல்லியில் பிரதமர் தலைமையில் காவிரி நதி நீர் ஆணைய கூட்டம் கூடியது.
ஆனால் இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடகா கைவிரித்து விட்டது.கர்நாடகாவின் இந்த முடிவை தமிழக விவசாயிகள் சங்கம் கடுமையாக எதிர்த்துள்ளது.
இன்று (வியாழக்கிழமை) தஞ்சாவூரில் விவசாயிகள் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின் அவர்கள்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காவிரியில் தண்ணீர்திறந்துவிட முடியாது என்று கூறியிருப்பதன் மூலம் கர்நாடக அரசு தமிழக விவசாயிகளுக்குதுரோகம் இழைத்துள்ளது.
கர்நாடகம் திறந்துவிட வேண்டிய நீரை திறந்துவிடாத காரணத்தால் குறுவை பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.தமிழக அரசு தொடரவுள்ள வழக்குடன் இந்த வழக்கும் நடைபெறும் என்று கூறியுள்ளனர்.
கருணாநிதி பேட்டி:
காவிரி நதி நீர் ஆணைய கூட்டம் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது குறித்து நிருபர்களிடம் கருணாநிதிகூறியதாவது:
கர்நாடகம் தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய காவிரி நீரை கட்டாயம் திறந்து விட வேண்டும்.
ஜெயலலிதாவே முன்பு அதிகாரமில்லாத காவிரி நதி நீர் ஆணையத்தை கலைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஆனால் அவர் அவ்வாறு கூறவில்லை என்று இப்போதைய முதல்வர் பன்னீர்செல்வம் பொய் சொல்கிறார் என்றார்கருணாநிதி.
நல்லகண்ணு பேட்டி:
தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடகம் கூறியுள்ளதன் மூலம் கர்நாடகம் தமிழகத்திற்குதுரோகம் இழைத்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications