நியாயம் வழங்குங்கள்... மக்களிடம் ஜெ. வேண்டுகோள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நான் வகித்த முதல்வர் பதவியை பறித்ததால் தங்கள் இன்னுயிரை ஈந்த ஒரு பாவமும் அறியாத, ஒரு தவறும்செய்யாத 20 பேருக்கும், வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மக்களாகிய நீங்கள்தான் நியாயம் வழங்க வேண்டும்என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு நேற்று (புதன்கிழமை) ஜெயலலிதா பேட்டியளித்தார். அப்போது அவர்கூறியதாவது:

தமிழக மக்களின் ஆதரவால்தான் நான் அரசியலில் நீடித்து வருகிறேன். 1996ம் ஆண்டு தேர்தலுக்கு பின்என்னையும், நான் தலைமையேற்றுள்ள அதிமுகவையும் வீழ்த்த அரசியல் எதிரிகள் எனக்கு எதிராக சதி வலைவிரித்தனர்.

என் மீது பல பொய் வழக்குகள் போடப்பட்டன. கோயம்புத்தூர் தொடர் குண்டு வெடிப்பில் எனக்குதொடர்பிருக்கிறது என்று கூறி ஆற்காடு வீராசாமியை விட்டு கருணாநிதி அறிக்கை வெளியிட வைத்தார்.

ராஜீவ் காந்தி கொலையாளிகளான தணு, சிவராஜனுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக போலியான புகைப்படத்தைவெளியிட்டு கருணாநிதி தன் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தினார்,

முன்னாள் தலைமைச் செயலாளர்வெங்கட்ராமனை காலையில் ஆள்வைத்து தாக்கிவிட்டு மாலையில் அவரைசென்று நான் விசாரித்ததாக கருணாநிதி குற்றம் சாட்டினார்.

என்னை தனிப்பட்ட முறையில் எப்படியெல்லாம் பழிக்க முடியுமோ, அப்படியெல்லாம் பழித்தார். எப்படியெல்லாம்பழிவாங்க முடியுமோ, அப்படியெல்லாம் பழிவாங்கினார். எப்படியெல்லாம் பொய் வழக்கு தொடுக்க முடியுமோ,அப்படியெல்லாம் தொடுத்தார் கருணாநிதி.

கருணாநிதி இழைத்த கொடுமைகளை தாண்டி 2001ம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்தித்தேன்.

மக்கள் தீர்ப்புதான் மகேசன் தீர்ப்பு என்று எல்லாரிடமும் ஆதரவு கேட்டேன். கருணாநிதியும் அவரதுகுடும்பத்தினரும் பத்திரிக்கை உலகை கைப்பற்றியனர். டிவி போன்றவற்றின் மூலம் என்னைப்பற்றி அவதூறுபிரச்சாரம் செய்தனர்.

இதையெல்லாம் மீறி மக்களாகிய நீங்கள் எனக்கு நல்ல தீர்ப்பு வழங்கினீர்கள். தமிழக முதல்வராகும் அரியவாய்ப்பை எனக்கு அளித்தீர்கள்.

ஆனால் என்னை முதல்வர் பதவயிலும் கருணாநிதி விட்டுவைக்கவில்லை. உங்களுக்கு நல பணிகளைஆற்றவிடவில்லை.

மத்தியல் ஆளும் பாரதிய ஜனதா அரசும் அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. மக்கள் வழங்கிய வாய்ப்பின்மூலம் நான் 4 மாதகாலங்களில் நிறைவேற்றிய நலப்பணிகளை மக்களாகிய நீங்கள் அறிவீர்கள்.

நேர்மையான நிர்வாகம், நேர்மையான ஆட்சி என்று நான் மேற்கொண்ட நிர்வாக்துக்கு உள்ளாட்சி தேர்தலில்தொடர்ந்து நீங்கள் ஆதரவுஅளிக்க வேண்டும்.

தமிழக அரசு வகுக்கும் நலத்திட்டங்களை நிறைவேற்ற எல்லா உள்ளாட்சி அமைப்புகளிலும் அதிமுகதலைமையிலான கூட்டணி வெற்றி பெற வேண்டும்.

நான் வகித்த முதல்வர் பதவி பறிக்கப்பட்ட போது அதை தாங்க முடியாமல் 20 பேரை தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர். இவர்கள் ஒரு பாவமும் அறியாதவர்கள். இவர்களுக்கு நீங்கள் தான் நியாயம் வழங்க வேண்டும். நீதிவழங்க வேண்டும்.

இந்த மாதம் 16 மற்றும் 18ம் தேதி நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவளித்துஅமோக வெற்றி பெற வைக்கவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+