ஆப்கானிஸ்தானில் மசூதி தகர்ப்பு
காபூல்:
அமெரிக்க விமானங்களின் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் ஆப்கானிஸ்தானில் இப்போது ஒரு மசூதியும்தகர்க்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலும் காண்டஹாரும் குண்டு மழையில் நனைந்து கொண்டிருக்கின்றன.தாக்குதலுக்குள்ளான பல கட்டடங்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கின்றன.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு நகரமான ஜலாலாபாத்தில் உள்ள மசூதி நேற்றிரவு நடந்த தாக்குதலில்தரைமட்டமானது. இதனால் ஏராளமான உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்பட்டதாக தலிபான் வட்டாரங்கள் கூறின.
ஜலாலாபாத்தில் தொடர்ந்து அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன என்றும் தலிபான் அரசுகூறியுள்ளது.
இதற்கிடையே, பின் லேடன் பதுங்கியிருப்பதாகக் கருதப்படும் குகை போன்ற "பங்க்கர்" பகுதிகளில் "பங்க்கர்பஸ்டிங் பாம்" எனப்படும் குண்டுகளால் தாக்குதல் தொடுக்க ஆரம்பித்துள்ளன அமெரிக்க விமானங்கள்.
குகைகளுக்கு மேல் உள்ள பாறைகளை முழுவதும் துளைத்துக் கொண்டு போய், பின்னர் வெடிக்கும் தன்மைவாய்ந்தவை இந்த "பங்க்கர் பஸ்டிங்" குண்டுகள். கடந்த செவ்வாய்க்கிழமை முதலாகவே இத்தகைய குண்டுகளைப்அமெரிக்க விமானங்கள் பயன்படுத்திக் கொண்டிருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின் லேடனை அழிப்பதற்காக இதுபோன்ற குண்டுகள் இன்னும் அதிகமாகப் பயன்படுத்தப்படவுள்ளதாகவும்கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications