அனுபவமுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை கோரி வழக்கு
சென்னை:
மேல்நலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்யும்போது, ஏற்கனவே பல பள்ளிகளில் பணியாற்றியஅனுபவம் உள்ள முதுநலைப் பட்டதாரிகளுக்கே முன்னுரிமை தர வேண்டும் என்று கோரி தமிழ்நாடு நிர்வாகடிரிப்யூனலில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்செங்கோட்டைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் டிரிப்யூனலில் தாக்கல் செய்துள்ள மனுவில், மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தை எழுத்துத் தேர்வு மூலம் மேற்கொள்ளப்போவதாக அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் என்னைப் போல பல்வேறு பள்ளிகளில் பணியாற்றி அனுபவம் உள்ள பட்டதாரிகள்பாதிக்கப்படுவார்கள். எனவே என்னைப் போன்ற முன் அனுபவம் கொண்ட பட்டதாரிகளுக்கு எழுத்துத் தேர்வுஇல்லாமல் நேரடியாக நியமனம் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
மனுவை ஏற்ற நீதிபதி அப்துல் வகாப், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி கல்வித்துறை செயலாளருக்குநோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications