ஒன்னா இருக்க கத்துக்கணும்... என்கிறார் வாஜ்பாய்
டெல்லி:
தமிழக-கர்நாடக அரசுகள் ஒற்றுமையுடன் காவிரி விவசாயிகளின் பிரச்சனையை அணுகினால் தான் சுமுகமானதீர்வு காண முடியும் என்று பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.
நேற்று நடந்த காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் முடிந்தபின், ஆணைய தலைவரான பிரதமர் வாஜ்பாய்நிருபர்களிடம் கூறியதாவது:
காவிரி நீரை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற காவிரி நதி நீர் நடுவர் மன்ற உத்தரவை அடிப்படையாகக்கொண்டுதான் மத்திய அரசு செயல்படுகிறது.
இந்த ஆண்டு காவிரி பாசனப் பகுதியில் கடும் நீர் வறட்சி ஏற்பட்டுள்ளது. மேட்டூருக்கு இந்த ஆண்டு நீர் வரத்து 85சதவிகிதம்தான் இருந்தது.
எனவே இருக்கும் நீரை சமமாக பகிர்ந்து கொள்ள, இரண்டு மாநிலங்களிடையேயும் புரிந்து கொள்ளுதலும்ஒத்துழைப்பும் மிக அவசியம்.
விஞ்ஞான ரீதியாக பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு விட்டாலும் கூட நீர் வரத்து குறித்து அந்தந்த சீசனின்இறுதியில்தான் அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் விவசாய பணிகள் சீசனின் துவக்கத்திலேயே நடைபெறதொடங்கி விடுகிறது.
வடகிழக்கு பருவமழை பொய்க்காது என்ற நம்பிக்கை உள்ளது. எனவே சம்பா பயிர் சாகுபடி நல்ல முறையில்இருக்கும் என்றும் அரசு எதிர்பார்க்கிறது.
நீர்ப் பஞ்சம் குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தேவையான அனைத்துஉதவிகளையும் வழங்கும் வகையில் மீண்டும் காவிரி நதி நீர் ஆணைய கூட்டம் கூட்டப்படும்.
ஒற்றுமையுடனும், ஏற்புத்தன்மையுடனும் அணுகினால் காவிரி விவசாயிகளின் பிரச்சனைக்கு நல்ல சுமுகமான தீர்வுகாண முடியும் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications