பாதுகாப்பு அமைச்சராகிறார் கே.சி. பந்த்
டெல்லி:
மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை மாற்றி அமைக்கப்படவுள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சராக திட்டக்கமிஷனின் துணை தலைவர் கே.சி. பந்த் பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது.
தெஹல்கா ஊழல் காரணமாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஜார்ஜ் பெர்ணான்டசுக்குமீண்டும் அமைச்சர் பதவி கொடுக்கப்படுமா என்பது பற்றித் தெரியவில்லை.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்தான், தற்போது பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் கூடுதல் பொறுப்புவகித்து வருகிறார்.
ஆப்கானிஸ்தானில் தற்போது அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதலையடுத்து, வெளியுறவுத் துறையில் ஜஸ்வந்த்சிங்கின் பணி அதிகமாகியுள்ளது.
மேலும், தற்போதுள்ள சூழ்நிலையில் பாதுகாப்புத் துறையிலும் முழுமையாகக் கவனம் செலுத்துவதற்கு ஏற்பத்தான்இத்துறைக்கென்று தனியாக ஒரு அமைச்சரை நியமிக்க பிரதமர் முடிவெடுத்துள்ளார்.
ராஜீவ் காந்தி பிரதமராக பதவி வகித்த போது பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த அனுபவம் கே.சி.பந்த்துக்குக் கைகொடுக்கும் என்று வாஜ்பாய் முழுமையாக நம்புகிறார்.
மேலும், சமீபத்தில் காஷ்மீர் அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவராக பந்த் ஆற்றிய சீரிய பணியைமறந்துவிட பிரதமர் தயாராக இல்லை. அதனால் பாதுகாப்புத் துறை அமைச்சர் பந்த் தான் என்று உறுதியாகநம்பலாம்.
சமீபத்தில் அலையன்ஸ் விமானம் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சம்பவதிதற்கு பின் விமான போக்குவரத்து துறைஅமைச்சர் ஷாநாவால் ஹுசைன் மீது குற்றச்சாட்டுகள் பெருகி வருகின்றன.
இதனால் அவர் பதவி நீக்கப்படலாம் அல்லது அவரது இலாகா மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த முறைபுதிதாக அமைச்சர்களாக நியமிக்கப்படுபவர்களில் பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள் யாரும் இருக்கமாட்டார்ள் என்றும்கூறப்படுகிறது.
தே.ஜ. கூட்டணியில் சமீபத்தில் மீண்டும் இணைந்துள்ள திரிணாமுல் காங்கிரஸ், பா.ம.கவைச் சேர்ந்தவர்களுக்குஅமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.
நவம்பர் 19ல் கூடுகிறது நாடாளுமன்றம்
நாடாளுமன்றக் கூட்டம் அடுத்த மாதம் (நவம்பர்) 19ம் தேதி கூடவிருக்கிறது. இந்த கூட்டம் 5 வார காலம்நடைபெறும். கூட்டத்தொடர் டிசம்பர் மாதம் 21ம் தேதி வரை நடைபெறும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications