உள்ளாட்சித் தேர்தலில் வன்முறையைத் தூண்ட அதிமுக சதி - கருணாநிதி
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலின் போது வன்முறையைத் தூண்டிவிட அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர் என்பதற்குஎங்களிடம் ஆதாரம் உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது,
சென்னையில் ஆளுங்கட்சியினர் சார்பாகவும், வேறுசில கட்சிகளின் சார்பாகவும் வன்முறையைத் தூண்டும்வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
மேலும், "போலீஸ் கமிஷனர் நம் பக்கம் இருக்கிறார். அதனால் எதற்கும் அஞ்சாமல் புகுந்து விளையாடுங்கள்"என்று ஆளுங்கட்சியைச் சேர்ந்த நடிகர்கள் சிலர் அதிமுகவினரிடம் பேசியதற்கான டேப் ஆதாரம் எங்களிடம்உள்ளது.
இதைத் தடுக்க நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை. பொதுமக்களே அதைப் பார்த்துக்கொள்வார்கள். இப்படிப் பேசி வன்முறை ஏற்படுமானால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதுஅவர்களுக்கே தெரியும்.
காவிரிப் பிரச்சனையில் பிரதமர் வாஜ்பாய், கர்நாடக அரசிடம் தண்ணீர் திறந்துவிடுமாறு கேட்டுள்ளார். அதைத்தான் அவர் செய்ய முடியும்.
ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் அவரே சென்று தண்ணீரை திறந்துவிட்டால் 2 மாநிலங்களுக்கும்இடையில் பெரிய கிளர்ச்சி ஏற்பட்டுவிடும். எனவே அவர் கடைபிடிப்பது சரியான அணுகுமுறைதான்.
மேலும் ஆந்திர முதல்வரைத் தமிழக ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் "பிராடு" என்று கூறுவது சரியல்ல. இப்படிப்பேசினால் அண்டை மாநிலங்களிடம் நாம் எப்படி உதவியை எதிர்பார்க்கமுடியும். அதற்காக நான் அண்டைமாநிலங்கள் செய்வதை நியாயப்படுத்துகிறேன் என்று கருதக்கூடாது.
நமது பேச்சும் ஒரு வரைமுறைக்குள் உட்பட்டு இருக்கவேண்டும் என்றார் கருணதாநிதி.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications