மீண்டும் ஊராட்சித் தலைவியானார் பங்காரு அடிகளாரின் மனைவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பங்காரு அடிகளாரின் மனைவி மேல்மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவியாக 2வது முறையாகப் போட்டியின்றித்தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் அதிபதி பங்காரு அடிகளார். இவரது மனைவி லட்சுமி பங்காரு,மேல்மருவத்தூர் ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட மனுதாக்கல் செய்தார்.
ஆனால் இவரை எதிர்த்து யாரும் மனுதாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகஅறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறையும் உள்ளாட்சித் தேர்தலில் லட்சுமிதான் போட்டியிட்டார். அப்போதும் இவரை எதிர்த்து யாரும்மனுதாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கேசவராயன் பேட்டையில் உள்ள 3 வார்டுகளுக்கான 6 உறுப்பினர்கள்போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications