யு.என்.பி. ஆட்சிக்கு வந்தால் பேச்சு நடத்த எல்.டி.டி.ஈ. தயார்
கொழும்பு:
நடைபெறவிருக்கும் இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சியான யு.என்.பி.வெற்றி பெற்றால் அவர்களுடன் நேரடியாக அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதுஎன்று விடுதலை புலிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் சந்திரிகா அரசிலிருந்த 12 எம்.பிக்கள் விலகி எதிர் கட்சியில்இணைந்தனர். இதனால் சந்திரிகா அரசு பெரும்பான்மையை இழந்தது.
இதையடுத்து நாடாளுமன்றத்தை கலைப்பதாக புதன்கிழமை நள்ளிரவு சந்திரிகாஅறிவித்தார். நாடாளுமன்ற தேர்தல் டிசம்பர் 5ம் தேதி நடைபெறும் என்றும் அவர்அறிவித்தார்.
நடைபெறவுள்ள இந்த நாடாளுமன்றத் தேர்தலில் சந்திரிகா தோல்வியடைந்துயு.என்.பி, ஆட்சிக்கு வந்தால் அவர்களுடன் நேரடியாக அமைதிப்பேச்சுவார்த்தையில் ஈடுபட விடுதலை புலிகள் முடிவு செய்திருப்பகதாகஇலங்கையிலிருந்து வெளியாகும் சண்டே டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
அமைதி பேச்சு வார்த்தைக்கான செயல்திட்டத்தை தயாரிக்குமாறு தனது அமைப்பின்அரசியல் பிரிவுக்கு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார். இந்த அமைதி பேச்சுவார்த்தைக்குவிடுதலை புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் எஸ்.பி. தமிழ்செல்வம் தலைமைவகிப்பார்.
புலிகள் தற்போது எடுத்துள்ள முடிவின் படி நார்வே தூதுக் குழுவின் தலையீடு எதுவும்இல்லாமல் அவர்களே அரசுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள்.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சந்திரிகா தலைமையிலான மக்கள்கூட்டணி தோல்வி பெறும் என்று விடுதலை புலிகள் நம்புகிறார்கள் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சில காலமாகவே சந்திரிகா அரசுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த விடுதலைபுலிகள் அக்கறை காட்டவில்லை.
சந்திரிகா அரசு அமைதி பேச்சுவார்த்தையில் அக்கறை காட்டவில்லை, ராணுவநடவடிக்கைளில்தான் தீவிரம் காட்டிவருகிறது என்று புலிகள் குற்றம் சாட்டிவந்தனர்.
இந்நிலையில் தமிழர் கட்சியான டி.யு.எல்.எப். இலங்கையில் தமிழர்கள் அதிகம்வாழும் பகுதியான வடகிழக்கு பகுதியில் உள்ள சிறிய தமிழ் கட்சிகளுடன் இணைந்துகூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடவுள்ளது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ), இலங்கை மக்கள் புரட்சிகர விடுதலைஇயக்கத்திலிருந்து ( ஈ.பி.ஆர்.எல்.எப்) பிரிந்து வந்துள்ள அனைத்து இலங்கை தமிழ்காங்கிரஸ் (ஏ.சி.டி.சி) ஆகியவை இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.
இந்த கூட்ட ணி யு.என்.பியுடன் தேர்தல் கூட்டணி அமைக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
விடுதலை புலிகள் மற்றும் பல தமிழ் அமைப்புகளின் முக்கிய குறிக்கோள் சந்திரிகாஅரசுக்கு ஆதரவாக இருக்கும் இலங்கை மக்கள் ஜனநாயக கட்சியை (ஈ.பி.டி.பி)தோல்வியுறச் செய்ய வேண்டும் என்பதுதான். ஈ.பி.டி.பி. கடந்த தேர்தலில் 4தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈ.பி.டி.பியை துரோகிகள் என்று விடுதலை புலிகள் குற்றம் சாட்டிவருகிறார்கள்.
வணிக சந்தையும் யு.என்.பிக்கு சாகமாகவே உள்ளது. இலங்கை நாடாளுமன்றம்கலைக்கப்பட்டவுடன், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடும் என்றஎதிர்பார்ப்பில் கொழும்பு மிலான்கா பங்கு சந்தையில் பங்குகளின் விலைகள்உயர்ந்தன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications