தொடர்கிறது தாக்குதல்: 200 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

காபூல்:

ஆப்கானிஸ்தானில் 7வது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) பகலில் அமெரிக்க விமானங்கள் தொடர்ந்துதாக்குதல் நடத்தி வருகின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் தொடங்கிய இத் தாக்குதல்கள் இடைவிடாமல் நடந்து வருகின்றன. இதுவரை200 பொது மக்கள் இத் தாக்குதலில் பலியாகியுள்ளனர்.

காபூலிலிலும் காண்டஹாரிலும் மிகக் கடுமையான குண்டு வீச்சுகளில் அமெரிக்க விமானங்கள் இன்று இறங்கின.கடந்த ஒரு வாரத்தில் மிக பயங்கரத் தாக்குதல் இது தான் என தலிபான்கள் தெரிவித்துள்ளன.

நேற்று இரவிலும் இன்றும் விமான எதிர்ப்புப் படைகளையும், விமான நிலையங்களையும் தான் அமெரிக்காதாக்கியது. காண்டஹார் அருகே உள்ள குஸ்லா ஜதீத் என்ற தலிபான்களின் விமானப் படைத் தளம் இன்றுதாக்கப்பட்டது.

மலைப் பகுதிகளில் உள்ள தலிபான்களின் முகாம்களையும் அமெரிக்க விமானங்கள் தாக்கின.

காபூல் அருகே உள்ள டிவி மலை என்று அழைக்கப்படும் டிவி டவர் கொண்ட ஒரு மலையும் தாக்கப்பட்டது. இந்தடவர் பல ஆண்டுகாலமாக செயல்படாமல் இருந்து வருகிறது. அதே போல ஒரு ரேடியோ டவரையும் அமெரிக்கவிமானங்கள் குண்டு வீசி அழித்தன.

ஜலாலாபாத், ஹிராத், மஷார்-ஏ-ஷெரீப் ஆகிய நகர்களிலும் விமானத் தாக்குதல்கள் நடந்தன.

அதே நேரத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு காபூலில் நுழைந்த ஒரு அமெரிக்க விமானத்தை ஆப்கானிஸ்தான்ராணுவத்தின் விமான எதிர்ப்பு பீரங்கிகள் கடுமையாகத் தாக்கின.

கிட்டத்தட்ட 10 நிமிடம் அங்கேயே சுற்றிய இந்த விமானம் இறுதியில் குண்டுகளைப் போடாமல் அந்த விமானம்திரும்பிவிட்டது.

மலைப் பகுதி கிராமங்களை இப்போது அமெரிக்கா தாக்கி வருகிறது என தலிபான்கள் கூறுகின்றனர். இந்தகிராமங்களை தீவிரவாத முகாம்கள் என நினைத்து அமெரிக்கா தாக்குகிறது என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் அமெரிக்கத் தாக்குதலுக்கு அஞ்சி நகர்களைவிட்டு ஓடி கிராமப் பகுதிகளிலும் மலைப் பகுதிகளிலும்முகாம்களை அமைத்துத் தங்கியுள்ள பொது மக்கள் தான் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிருபர்களுக்கு அனுமதி:

போர் தொடங்கியது முதல் எல்லா நிருபர்களையும் (அல் ஜசீரா டிவி நிருபர்கள் தவிர) நாட்டைவிட்டுவெளியேற்றிய தலிபான்கள் நேற்றிரவு முதல் முறையாக 50 நிருபர்களை தங்கள் நாட்டுக்குள் அழைத்துச்சென்றனர்.

அமெரிக்கத் தாக்குதலால் ஏற்பட்டுள்ள அழிவுகளை அவர்களுக்கு தலிபான்கள் சுற்றிக் காட்டினர்.

அமெரிக்க குண்டு வீச்சில் ஏராளமான பொது மக்களும் குழந்தைகளும் தான் கொல்லப்பட்டுள்ளனர் என்றுதலிபான்கள் கூறினர். கை, கால்களை இழந்து, மண்டை உடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும்குழந்தைகளை நிருபர்களிடம் தலிபான்கள் காட்டினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+