மேட்டூரில் கள்ளச்சாரயம் கடத்திய 4 பேரை கைது செய்த அதிரடிப்படை
சேலம்:
கள்ளச்சாராயம் கடத்திச் சென்ற 4 பேரை, வீரப்பனைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த அதிரடிப்படை போலீசார்மடக்கிப்பிடித்துக் கைது செய்தனர்.
சேலம் அருகே மேட்டூர் வனப்பகுதியில் சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தேடும் பணியில் தமிழக அரசின் சிறப்புஅதிரடிப்படையினர் ஈடுபட்டுவருகின்றனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த அவர்கள் மேட்டூர் அருகே வந்துகொண்டிருந்த ஒருகாரை நிறுத்திச் சோதனைசெய்ய முயன்றனர்.
ஆனால் கார் நிற்காமல் வேகமாசச் சென்றது. உடனே காரில் ஏதோ மர்மம் உள்ளது என்பதைப் புரிந்துகொண்டபோலீசார் தங்களுடைய ஜீப்பில் காரைத் துரத்தினார்கள்.
பிறகு சின்னத்தண்டா என்ற இடத்தில் காரை வழிமறித்து சோதனை செய்ததில், காருக்குள் 100 லிட்டர்கள்ளச்சாராயம் மறைத்துவைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பிறகு காரில் பயணம் செய்த 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications